பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இாண்டாவது திங்கள் : பொறி இயக்குதல் முதலில் பொறியின் உறுப்புகளை அவை இயங்கும் முறைகளை ஒருநாள் முழுவதும் கூர்ந்து கவனிக்க வேண்டும், எண்ணெய் விடும் இடங்களை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். படுக்கை தயாரித்து அச்சுப் பதிவு சரி செய்யத் தெரிந்து கொள்ள வேண்டும். மைத் தொட்டியைக் கையாளும் முறை, உருளை களைச் சரிபார்க்கும் முறை ஆகியவற்றைப் பழகிக் கொள்ள வேண்டும். கழிவு தாள்களை அடுக்கி வைத்துக் கொண்டு பொறியில் அச்சிட்டுப் பழக வேண்டும். பழகும் நிலையில் பொறி ஒட்டு பவர் எப்போதும் அருகில் இருக்க வேண்டும். அவர் இல்லாத போது தனியாகப் பொறி இயக்கிப் பழகக்கூடாது. ஏனெனில், தவறு நேராமல் இருக்கவும், பொறிக்கு ஊறு நேராமல் இருக்கவும் ஏதேனும் நேர்ந்தால் உடனடியாக அதைத் தவிர்க்கவும் நல்ல அனுபவமுடைய அவர் எப்போதும் அருகில் இருக்க வேண்டும். மூன்றாவது திங்கள் : புத்தகம் கட்டுதல் இந்தத் தொழிலைப் பயிலுவோர் முதலில் சிறு சிறு வேலைகளைச் செய்து பழக வேண்டும். படிவம் மடித்தல், கூழ் தடவுதல், வேலை பார்ப்பவோர்க்கு உதவி செய்தல். தைத்தல், எண் குத்துதல் போன்ற சிறு வேலைகளை யெல் லாம் பழகிக் கொள்ள வேண்டும். மடிக்கும் முறை, தைக்கும் முறை, ஆகியவற்றை முறைப்படி பழகிச் செய்தல் வேண்டும். இந்த மூன்று தொழில்களையும் மூன்று மாதங்களில் இடைவிடாது பழகித் தேர்ந்த பிறகு மூன்றில் எது எளிதாகத் தோன்றுகிறதோ அல்லது விருப்பமானதாக இருக்கிறதோ அதைத் தொடர்ந்து செய்து நல்ல தேர்ச்சி பெற்றுச் சிறந்த தொழிலாளியாக விளங்க வேண்டும், -