பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101


இது தவிர, சுற்றுச் சூழலையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். சுற்றிலும் உள்ள அச்சகங்களில் எவ்வளவு கூலி வாங்கு கிறார்கள் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்குக் கிட்டத்தட்ட ஒத்து வருமாறு நம் கணக்கு அமைய வேண்டும். அவர்களை விடக் கூலி கூட்டிச் சொன்னால் வேலை வராது. குறைத்துச் சொன்னால், வேலை வரும்; கூடவே இழப்பும் வரும். ஆகவே. எல்லாவற்றிலும் இன்றியமை யாதது, “உலகத்தொடு ஒட்ட ஒழுகல்". சில சூழ்நிலைகளில் கூலியை ஏற்றிக் கொள்ளலாம். சுற்றிலும் இருப்பவர்களைக் காட்டிலும் மிகுதியாகக் கூலி வாங்கலாம். அப்படி வாங்கினாலும் வேலை நிறைய வரும். அது எப்போது என்றால், நம் வேலை தரமாக இருக்கும் போது. ஒழுங்காக வேலை செய்யக் கூடியவர்: குறித்த நேரத்துக்குத்தரக் கூடியவர். அச்சு என்றால் அச்சு; அழகான அச்சு எனப் பிறர் பாராட்டும் காலத்தில் நாம் சிறிது கூலி உயர்த்துவதைப் பற்றி மக்கள் கவலைப்படப் போவதில்லை. கடிதத் தாளுக்குக் கூலி கணக்கிடும் முறை. கோப்புக் கூவி கு அச்சிடும் கூலி ரூ கட்டுக் கூலி கு தாள் விலை கு கூட்டுத் தொகை ரூ