பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. மேலாண்மை MANAGEMENT மேலாண்மை என்றால், மேலாளராயிருப்பவர் மற்றவர் களை ஆணையிட்டு அடக்கியாளுதல் என்று பொருள் கொள் வர் சிலர். வேலைகள் ஒழுங்காக நடக்கின்றனவா என்று கண்காணிப்பது, ஒழுங்கில்லாதபோது ஒழுங்குபடச்செய்வது, அதற்குரிய அதிகாரங்களை மேற்கொள்ளுவது என்று பொருள்கொள்வர் சிலர். செயல்களை, பணிகளை ஒழுங்கு படுத்தும்விதிமுறைகளை வகுத்து,நடத்துவது என்று பொருள் கூறுவர் சிலர். மொத்தமாகச் சொல்லப் போனால், ஒரு நிறுவனத்தின் இலட்சியத்தை அடைவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வது என்பதுதான் மேலாண்மையாகும். ஒரு நிறுவனம் என்பது-குறிக்கோள் ஒன்றையடைவதற் காக உருவாக்கிடப்பட்டதாகும். இக்குறிக்கோளை நெறிப் படுத்தி நடத்திக் கொடுப்பது தான் ஒருமேலாளரின் வேலை யாகும். மேலாளரின் பணியைக் கீழ்க்கண்ட ஐந்து தலைப்புகளில் அடக்கலாம். 1. Éloit-LEGA;di (Planning) 2. அமைத்தல் (Organising) 3, FLjusrt —ÁSG) (Staffing)