பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


4. பணித்தல் (Directing) 5. @¡5ğ)ı'ıLJ®9šgéì) (Controlling) நிறுவனத்தின் பணிகள் அல்லது குறிக்கோளை நிறை வேற்ற என்னென்ன பணிகளை எப்படி யெப்படிச் செய்ய வேண்டும் என்று திரு திட்டம் வகுத்துக் கொள்ளவேண்டும். திட்டமிடுதல் ஓர் அச்சகத்தை நிறுவுவதென்றால், எந்த அளவில்எவ்வளவு முதலீட்டில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளவேண்டும் அந்த முதலீட்டை எப்படி உருவாக்குவது என்று தீர்மானித்துக் கொள்ளவேண்டும். அந்த முதலீட்டில் என்னென்ன பொறிகள், கருவிகள், துணைக்கருவிகள் வாங்க வேண்டும் அதைப் பயன்படுத்த அல்லது வேலை செய்ய எத்தனை பேர் தேவை? மூலப் பொருள்கள், துணைப் பொருள்கள் எவ்வளவு வேண்டும்சம்பளச் செலவு வாடகை-மற்ற செலவுகள் எவ்வளவு ஆகும்? ஒவ்வொன்றிற்கும் ஆகும் செலவு எவ்வளவு? வரவு எவ்வளவு? இலாபம் எவ்வளவு என்றெல்லாம் முன் கூட்டியே கணக்குப் பார்த்து, நம்முடைய தொழிலின் அமைப்பை ஓர் அளவு செய்து கொள்வதே திட்டமிடுதல் ஆகும். அச்சிடுவதற்குரிய ஒர் அச்சுப் பொறி, அதன் விலைஅது செய்யக் கூடிய வேலையின் மதிப்பு, எத்தனை அச்சுப் பொறிகள் வாங்குதல் வேண்டும்? முதலீட்டு அளவு. அதற்குத் துணைக் கருவிகள்: தாள் வெட்டும் பொறிநகல் எடுக்கும் பொறி-எழுத்து வகைகள்-அவற்றிற்குரிய அச்சுப் பெட்டிகள், அடுக்கும் தட்டுகள் எத்தனையெத்தனை வாங்கவேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்,