பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108


மேற்கண்ட அமைப்புப் படத்தில் காட்டியிருப்பது போல் ஒவ்வொரு பணிக்கும் ஆட்களை அமர்த்துவது ஒரு வசதியான அச்சகத்தினால்தான் முடியும். மிகப்பெரிய அச்சகங்களில் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி மேலாளர்கள் (Managers), மேற்பார்ப்போர் (Supervisors), என்று அமைத்து கொள்வதுமுண்டு.

சிறிய அச்சகங்களில், உரிமையாளரே மேலாளர் பணியை மேற்கொள்ளலாம். தலைமை அச்சுக் கோப்பாளரே, பக்கம் கட்டும் வேலையையும், படிவம் முடுக்கும் வேலையையும் மேற்கொள்ளலாம். கட்டுநர்களே மடிப்பது தைப்பது பசை தடவுவது கம்பியடிப்பது போன்ற வேலைகளையும் சேர்த்துச் செய்யலாம். சிற்றுார்களில் உள்ள அச்சகங்களில் ஓரிருவரே எல்லா வேலைகளையும் செய்து கொள்வர். வரும் வேலைக்குத் தக ஆட்களும் அமைய வேண்டும். சிலச்சில வேலைகளே வரும் சிற்றுார்களில், ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி ஆள் வைத்துக் கட்டுபடியாகாது. ஆகவே எல்லா வேலைகளையும் ஒருவரோ அல்லது இருவரோதான் செய்து கொள்ளவேண்டும். அவர்கள் அனைத்துத் தொழிலும் பயின்றிருக்க வேண்டும்.

நான்காவது பணித்தல்

ஒவ்வொரு பிரிவினரும் செய்ய வேண்டிய வேலைகளை நாள்தோறும் ஒப்படைத்து அவற்றை உரிய நேரத்தில், நேரிய முறையில் சிறப்பாகச் செய்யும்படி பணித்தல் மேலாளரின் மற்றொரு பணியாகும்.

ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வரும் வேலைகளை ஒழுங்குபடுத்தி, அச்சுக் கோப்பாளர்களை அழைத்து உரிய நேரத்தில்கோத்து முடிக்கச் செய்தல் வேண்டும். கோத்து முடிந்தவற்றை மெய்ப்பு எடுத்து பிழை திருத்துபரைக் கொண்டு பிழை திருத்தச் செய்யவேண்டும். கோப்பாளர்கள்