பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109


பிழைதிருத்தியபின் பக்கம் கட்டுபவரைப் பக்கம்கட்டச் செய்தல் வேண்டும். பக்க மெய்ப்புகளை, உரிய பிழை திருத்துவோருக்கு அனுப்பி வந்த பின் மீண்டும் திருத்திப் படிவம் முடுக்குதல் வேண்டும். முடுக்கிய படிவங்களை வரிசைப் படுத்தி அச்சுப்பொறியில் நாள்தோறும் ஒட்டுதல்வேண்டும். ஒரு வேலைக்குரிய படிவங்கள் யாவும் அச்சிட்டபின் புத்தகம் கட்டுநர்களைக் கொண்டு அவற்றைக் கட்டுதல் வேண்டும். வேலை முடிந்து புத்தகங்கள் உருவானபின், வேலை பணித்தோர் வசம் ஒப்படைத்தல் வேண்டும். ஒப்படைக்குமுன், பட்டியல் போட்டு, அதற்குரிய பணத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

ஐந்தாவது நெறிப்படுத்தல் (Controlling)

ஒப்படைத்த வேலைகள் ஒழுங்காக உரிய நேரத்தில் நடக்கின்றனவா என்று கண்காணித்தல் வேண்டும். அடுத்தடுத்து, ஒவ்வொரு பகுதி வேலைகளும் தொடர்ந்து நடந்து முடிகிறதா என்று பார்த்துக் கொள்ளல்வேண்டும். இடையில் ஏற்படும் தடைகளுக்குக் காரணம் அறிந்து அவற்றைக் களைதல் வேண்டும், பணிசெய்வோர் ஆற்றல் குறைவாகவோ சுறுசுறுப்பாகவோ காணப்படாவிட்டால், அதற்கு வேறு ஆள் அமர்த்தல் வேண்டும். ஒவ்வொருவருக்கும் கடமையுணர்வு ஏற்படும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். கடிந்து பேசாது ஆனால் கண்டிப்பான தன்மையில், வேலைகள் உரிய நேரத்தில் முடியவேண்டிய இன்றியமையாமையை உணர்த்துதல் வேண்டும். பணி செய்ய வந்தவர்கள், பணியில் ஈடுபடாது, பிறவழியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். வேலைகள் தொடர்ந்து நடைபெறுவதில் கண்ணும் கருத்துமாய் இருத்தல் வேண்டும்.

மேற்கண்ட ஐந்து பணிகளையும் ஒரு மேலாளர் செம்மையாக நடைபெறும்படி பார்த்துக் கொண்டால், நிறுவனம்