பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

 உரிய வளர்ச்சியை விரைவில் பெற்றுச் சிறந்து விளங்கும். அச்சக உரிமையாளருக்கு உரிய வருவாய் பெருகி மகிழ்ச்சியடைவார். நல்ல வருவாய் கிடைத்தால், தொழிலாளர்களுக்கும் ஈட்டுப்பங்கு (Bonus) நிறையக் கிடைத்து, இரு சாராரும் உவப்படையலாம்.

மேலாளருக்குரிய தகுதிகள்

ஒர் அச்சக மேலாளர், அச்சுத் தொழிலின் ஒவ்வோர் பிரிவிலும், அடிப்படை அறிவுடையவராக இருக்க வேண்டும்.

அச்சுக்கோப்பது, எழுத்துக்களின் வடிவமைப்பு, அவற்றின் அளவுகள், வகைகள், அவற்றை அச்சுக்கோப்பில் அமைக்கும் முறை ஆகியவற்றில் தேர்ச்சியுடையவராயிருக்க வேண்டும்.

அச்சுப் பொறி இயங்கும் முறை, மைவகைகள், மைக்கலவைகள், அச்சமைப்பின் தோற்றம், மைப்படிவு காணுந்தன்மை ஆகியவற்றை நன்கு தெரிந்தவராயிருக்க வேண்டும்.

புத்தகக் கட்டுமுறை, தையல் வகைகள், அவற்றைச் சிறப்பாகவும் அழகாகவும் நுட்பமாகவும் செய்யச் செய்யும் நுண்ணறிவுடையவராக இருக்க வேண்டும்.

வேலை கொடுக்கவரும் வாடிக்கையாளரின் நம்பிக்கைக்கும் பாராட்டுக்கும் உரியவராக இருக்கவேண்டும். வாடிக்கையாளரின் தேவையையும் விருப்பத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு விரைந்து உதவக் கூடியவராக இருக்கவேண்டும். ஒரு முறை வேலை கொடுக்க வந்தவர், திரும்பவும் வரவேண்டும் என்ற எண்ணம் உடைவராகத் திரும்பும்படி மகிழ்ச்சியோடு செல்ல வேண்டும்.

தொழிலாளர்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராக இருக்க வேண்டும். அதே நேரம் உரிமையாளரின் நம்பிக்கைக்கும், இந்த மேலாளரால்தான் நம் தொழில்