பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111


சிறப்படைகிறது என்ற எண்ணத்தை உருவாக்கித் தருபவராகவும் இருக்கவேண்டும். தொழில் தொடர்புடைய ஒவ்வொருவரும் விரும்புபவராக இருக்கவேண்டும்.

ஒரு மேலாளர் தொழிலில் விருப்பும் ஆர்வமும் கடமையுணர்வும் உடையவராக இருக்கவேண்டும் சிக்கனமாகச் செலவு செய்து, நிறைய வருமானம் தரக்கூடிய வகையில் செயலாற்றி நிறுவனம் வளரச் செய்யும் எண்ணம் இருக்க வேண்டும். எந்தச் சிக்கலையும், பொறுமையாகவும், திறமையாகவும் காலந்தாழ்த்தாமலும் தீர்த்து வைக்கும் ஆற்றல் உடையவராய் இருக்கவேண்டும். தன் கீழ் வேலை செய்பவர்கள், என்றும் தன்னுடன் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவும், தன் கட்டளைகளை அப்படியப்படியே நிறைவேற்றக் கூடியவர்களாகவும் உருவாக்கி வைத்திருக்கவேண்டும். வாடிக்கையாளர்களுக்குப் பணிகளை ஒழுங்காகவும், குறித்த நேரத் திலும் முடித்துக் கொடுக்கக்கூடிய நிறுவனம் தன் நிறுவனம் என்ற நம்பிக்கையை ஊட்டக் கூடியவராய் இருக்கவேண்டும்.

ஒரு நிறுவனத்தின் மேலாளர் அந்நிறுவனத்தின் தலைவரைப் போன்றவர். அவர் தன் கீழ் வேலை செய்பவர்களை எந்த நேரமும் வழி நடத்திச் செல்பவராக இருக்கவேண்டும். தன் கீழ் உள்ளவர்கள், தம் கடமையையுணர்ந்து உரிய வேலையைத் தங்களாகவே செய்து விடுவார்கள் என்று ஒரு மேலாளர் நினைப்பாரேயானால், மேலாளர் வேலைக்கு அவர் வந்திருக்கவே வேண்டாம். உண்மையில் உலகில் எல்லா வேலையாட்களும் அப்படியிருப்பது கிடையாது. ஆகையால், மேலாளர், தம் கீழ் உள்ளவர்களை எப்போதும் மேற்பார்த்து, அவர்கள் இடைவிடாது தம் கடமைகளைச் செய்ய உணர்த்திக் கொண்டேயிருக்க வேண்டும்.