பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

13.கோட்டுத்தகடுகள்.Brass rules

கோடுகள் போடுவதற்கும் கட்டங்கள் அமைப்பதற்கும் இவை பயன்படுகின்றன. இத்தகடுகள் பித்தளையினாலும், ஈயத்தினாலும் செய்யப்படுகின்றன. இவை இரண்டடி நீளம் உள்ளன. வேண்டிய அளவுக்கு வெட்டிப் பயன் படுத்தலாம்.

14.அணைப்புத்தகடு (setiing)

எழுத்துக் கோக்கும் போது கைக் கோவில் தலைப்பக்கத்தில் இத்தகட்டை வைத்து, பிறகு வரிகளைக் கோக்க வேண்டும். ஒவ்வொரு வரியும் கோத்து முடிந்த பின், இத் தகட்டை இடம் மாற்றிக் கொண்டே வரவேண்டும். கைக்கோல் அளவிற்கு ஒரு புறம் நேராகவும் மறுபுறம் சாய்வாகவும் பித்தளைத் தகட்டை வெட்டினால் அதுவே அணைப்புத் தகடாகும்.

15. அளவுதகடு-Gauge

பக்கங்கட்டும் போது பக்கத்தின் அளவைச் சரியாக அமைக்கத் தகடு பயன்படுகிறது. பக்கத்தின் உயரம் எந்த அளவு அமைய வேண்டுமோ அந்த அளவுக்கு பித்தளைத் தகட்டில் வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.