பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

இரண்டு புள்ளியளவுள்ள வரிவெளிகளை மெல்லிய வரி வெளிகள் (Thin lead) என்றும், மூன்று புள்ளி அளவுள்ள வரி வெளிகளை தடித்த வரி வெளிகள் (Thich lead) என்றும் குறிப்பிடுகிறோம். வரிவெளிகளுக்குப் பயன்படும் தகடுகள் ஈயத்தினால் ஆகியிருப்பதால் இவை ஈயம் என்ற பொருளுள்ள lead என்ற பெயராலேயே ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

தமிழில் நாம் இதனை ஈயவெளி (lead Space) என்று அழைக்கலாம். அதை விட வரிகளுக்கிடையே இந்த ஈயத் தகடுகளைப் பயன்படுத்துவதால் வரிவெளிகள் என்று கூறுவதே பொருந்தும். ஈயத் தகடுகள் இரண்டு புள்ளித் தடிப்பிலும், மூன்று புள்ளித் தடிப்பிலும் கிடைக்கின்றன. இவற்றின் உயரம் இடைவெளிகளின் உயரமாகிய 4½ எம் அளவேயாகும்.

வரிக்கு வரி இடைவெளி விடுவதோடு பத்திக்குப் பத்தி மிகுதியான இடைவெளி விடுகிறோம். இந்த இடைவெளிகளின் அளவு அரை எம் முதல் இரண்டு எம் வரையில் விருப்பத்தைப் பொருத்து விடப்படுகிறது. இந்த இடைவெளிகளை மரச்சக்கைகளாகப் பெறுகிறோம். இந்த மரச்சக்கைகள் அரை எம் தடிப்பிலும் ஒரு எம் தடிப்பிலும் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு பத்தியும் தொடங்கும் போது இரண்டு எம் அல்லது மூன்று எம் வெளி விட்டுத் தொடங்குகிறோம். அதுபோல பத்தி முடிவில், சொற்றொடர் முடிந்து மிகுந்துள்ள இடத்தை வெறும் வெளியாய் விட்டு விடுகிறோம். இந்த வெளிகளுக்கு வெளிக்கட்டைகள் (Quads) என்று பயர்.