பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


ஒரு புத்தகத்தில் கட்டுரை தொடங்குமுன் தலையில் நிறைய இடம் விட்டுப் பின் தொடங்குகிறோம். கட்டுரை முடிவில், அது முடிந்தபின் மிகுதி இடத்தை வெறும் வெளி யாய் விட்டு விடுகிறோம். இந்த வெளியிடங்கள் முழுவதை யும் நிறைக்கும் இடைவெளிகளைக் கட்ட வெளிகள் (Quatations) என்று கூறுகிறோம். இந்தக் கட்டவெளிகள் நான்கு எம் நீளமும் இரண்டு எம் அகலமும், நான்கு எம் நீளமும் மூன்று எம் அகலமும், நான்கு எம் நீளமும் நான்கு எம் அகலமும், இன்னும் வேறு அளவுகளிலும் உள்ளன. கட்டங் கட்டமாக இவற்றின் வடிவம் அமைந்திருப்பதால் இவற்றைக் கட்டவெளிகள் என்று அழைப்பது பொருத்தமே. வெளிக் கட்டங்கள் என்றும் குறிப்பிடலாம் குறிப்பு: அச்சு வேலையில் எம் என்று குறிப்பிடுவது பொதுவாக 12 புள்ளிச் சதுரத்தையே குறிக்கும். ஒவ்வொரு புள்ளி எழுத்துக்களிலும் அந்தந்தப் புள்ளிச் சதுரங்களையே குறிக்கும். 12 புள்ளி எழுத்துள்ள வரியில் 12 நீளமும் 12 புள்ளி அகலமும் ஒரு எம் ஆகும். அது போல 10 புள்ளி எழுத்துள்ள வரியில் 10 புள்ளி நீளமும் 10 அகலமும் ஒரு எம் ஆகும். அது போல 8 புள்ளி எழுத்துள்ள வரியில் 8 புள்ளி நீளமும் 8 புள்ளி அகலமும் ஒரு எம் ஆகும். இப்படி அந்தந்த எழுத்து வரிகளில் செய்யப்படும் எம் என்பது அந்தந்தப் புள்ளிச் சதுரங்களையே குறிக்கும். இரண்டு எம் மூன்று எம் கட்டை வெளிகளின் உயரமும் அந்தந்தப் புள்ளி எழுத்துக்களின் உயரக் கணக்கேயாகும்