பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


பார்த்து விட்டு மீண்டும் அந்தக் குழியிலேயே போட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பார்த்துப் பார்த்துப் போடுவதால், எழுத்துக்கள் இருக்கும் இடம் மனப்பாடமாகி விடுகிறது. நன்றாக மனப்பாடம் ஆனபின் மீண்டும் ஒரு வாரத்திற்கு எழுத்துக்களைப் பிரிக்கும் வேலையையே தொடர்ந்து செய்து வரவேண்டும். அதன் பிறகு தான் கோக்கத் தொடங்க வேண்டும். எழுத்துக் கோக்கத் தொடங்கும் போது, எதைக் கோக்க வேண்டுமோ அந்த மூலப்படியை (Original) அச்சுப் பெட்டியில் மேல்தட்டின் வலது புறத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பார்த்து ஒவ்வொரு சொல்லாக மனத்தில் வாங்கிக் கொண்டு அச் சொல்லுக்குரிய எழுத்துக் களை ஒவ்வொன்றாகக் கையில் எடுத்து, இடது கையில் பிடித்துள்ள கைக்கோலில் (Stick) அடுக்கி வர வேண்டும். கைக்கோலை இடது உள்ளங்கையில் நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். கைக்கோலின் பிடிப்பக்கம் இடது புறமாகவும், தலைப்பக்கத்தை நான்கு விரல்களும் அணைத் துக் கொள்ள மறுபுறத்தை வளைத்து, எழுத்தின் மேல் பெருவிரல் படியும்படியாகவும் பிடித்துக் கொள்ள வேண்டும். கைக்கோல் (Stick) மரத்தினால் ஆகியது. எழுத்து வரி களை அடுக்கப் பயன்படுவது. இது 22 எம் 24 எம் 28 எம் என்று தேவைக்கேற்ற அளவுகளில் செய்யப்பட்டுள்ளது. நாம் அடுக்கும் வரியின் நீளம் 22 எம் என்றால் 22 எம் கைக் கோலை எடுத்துக் கொள்ள வேண்டும். கைக்கோலின் தலைப்பக்கத்தில் ஒரு வரிவெளித் தகட் டையும் (lead) அதன் மேல் அணைப்புத் தகட்டையும் (Setting) வைத்த பிறகே எழுத்துக்களை அடுக்கத் தொடங்க வேண்டும். ஒவ்வோர் எழுத்திலும் கழுத்து வளைவு என்ற