பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


ஒரு குழி அல்லது பள்ளம் அமைந்திருக்கும். இந்தக் கழுத்து வளைவில் இடது பெருவிரல் படிந்து அழுத்திக் கொள்ள வேண்டும். எழுத்தின் தலைப்பக்கம் கைக்கோலின் தலைப்பக்கத்தில் பொருந்தும் படியும் அதன் கழுத்து வளைவு பெருவிரலின் அணைப்பில் இருக்கும்படியும் ஒவ்வோர் எழுத்தாக இடது புறத்திலிருந்து வலது பக்கமாக அடுக்கிக் கொண்டே போக வேண்டும் ஒவ்வோர் எழுத்தின் மீதும் அடுத்தடுத்துப் பெரு விரல் நகர்ந்து அணைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வரி அடுக்கி முடிந்தவுடன், கைக்கோலின் தலைப் பக்கத்தில் முதலில் வைத்த வரிவெளி (lead) அங்கேயே இருக்க, அணைப்புத் தகட்டை (Setting) எடுத்து, அடுக்கிய வரியின் வெளிப்புறத்தில் வைத்து விடவேண்டும். இப்போது பெருவிரல் அணைப்புத் தகட்டை அழுத்திக் கொள்ள வேண்டும். அணைப்புத் தகடு அடுக்கிய வரியில் உள்ள எழுத்துக்களை அழுத்திப் பிடித்துக் கொள்ளும். ஒவ்வொரு வரியும் அடுக்கப்பட்டபின் அவ்வவ் வரியின் வெளிப்புறத்துக்கு அணைப்புத் தகட்டை மாற்றிக் கொண்டே வர வேண்டும். கைக்கோல் நிறைய அடுக்கிய பின், அடுக்கிய வரிகளை மொத்தமாக வெளியில் கழற்றி எடுக்க வேண்டும். கைக்கோலின் வரி கொள் அளவு 12; எம் ஆகும். 12 புள்ளி எழுத்துக்கள் 10 வரிகளும் 11 புள்ளி எழுத்துக்கள் 13 வரிகளும் 10 புள்ளி எழுத்துக்கள் 15 வரிகளும் அடுக்கலாம். அடுக்கிய வரிகளைக் கழற்றி எடுக்கும் போது, தலையில் வைக்கப்பட்ட வரிவெளி (lead) யையும், வெளியில் கடைசி வரியை அனைத்துக் கொண்டுள்ள அணைப்புத் தகட்டையும் அ-3