பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


அடுத்த வரியில் பூசணி, வாசல் என்று சேர்ந்தே வரவேண்டும். ஒரு வரியின் இறுதியில் பல எழுத்துக்களைக் கொண்ட ஒரு சொல் வந்து அது முழுவதும் அந்த வரியில் அடங்காமற் போகுமானால் அந்தச் சொல்லை வரி யிறுதியில் பாதியும், அடுத்த வரித் தொடக்கத்தில் மீதியுமாகப் போட வேண்டி வரும். அவ்வாறு உடைக்க நேரிடும் போது, ஒசை நயத்தோடு உடைத்துப் போட வேண்டும். அவ்வாறு ஒசை நயத்தோடு உடைக்க முடியாவிட்டால் முழுச் சொல்லையுமே அடுத்த வரிக்குக் கொண்டு செல்லலாம். வேண்டுமானால் என்ற சொல் வரி இறுதியில் வந்து உடைபடும் போது வரி இறுதியில் வேண் என்றும் அடுத்த வரித் தொடக்கத்தில் டுமானால் என்றும் வருவது பொருந்தாது. முதல் வரி இறுதியில் வேண்டு என்றும் அடுத்த வரித் தொடக் கத்தில் மானால் என்றும் பிரித்தால், அப்படிப் பிரிபடும் ஒசையானது செவிக்கின்பம் தரும் நயமுடையதாய் உள்ளது. எடுக்கப்படும்போது என்ற சொல்லை எடுக்கப்ப-டும்போது என்று பிரிக்காமல் எடுக்கப்-படும் போது என்று பிரித்தால் நன்றாயிருக்கும். ஒசை நயத் வைதயும், சில இடங்களில் பொருள் நயத்தையும் அடிப் படையாகக் கொண்டு வரிஇறுதிச் சொற்களை உடைப்பது படிப்பவர்களுக்கு இன்பம் தருவதாகும், ஒரு வரியின் தொடக்கத்தில் மெய் எழுத்தோ ஒற்றை எழுத்தோ வரக் கூடாது. “வந்தான்’ என்ற சொல்லில் முதல் வரிக் கடைசியில் வந்தா என்றும் அடுத்த வரித் தொடக்கத்தில் ன் என்றும் வரக் கூடாது. அதுபோலவே "படங்களை’