பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


என்ற சொல்லின் இறுதி எழுத்தாகிய ளை மட்டும் அடுத்த வரியின் தொடக்கத்தில் தனியாக வரக் கூடாது. ஒரு எழுத்துமட்டும் தனித்து நின்று பொருள் தரக் கூடிய சொல்லாக இருக்குமானால் அது வரிக்கு முதலில் தனி எழுத்தாக வரலாம். மை, பை, பூ, வா போன்ற பொருள் உள்ள சொற்களாகிய தனிஎழுத்துக்கள் வரிக்கு முதலில் வரலாம். சொல்வின் விகுதியாக உள்ள தனி எழுத்துக்கள் வரி முதலில் வரக் கூடாது. ஒரு சொல்லுக்கும் அடுத்த சொல்லுக்கும் இடையில் ஒரு தடித்த இடைவெளி (Thick Space) போட வேண்டும். வரி முடிவில் ஏதாவது ஒர் எழுத்து தனியாக விடுபடும் போல் இருந்தால், தடித்த இடைவெளிகளை எடுத்து விட்டு மெல்லிய இடைவெளிகளைப் போட்டு, அந்த எழுத்தை அந்த வரியிலேயே அடக்க முடிந்தால் அடக்கி விடலாம். வரி இறுதியில் வரும் சொல் உடைப்பதற்கு வராமல் அச்சொல் முழுவதும் அடுத்த வரிக்குக் கொண்டு செல்லப் படும்போது வரி இறுதியில் மிகுந்திருக்கும் இடத்தை அப்படியே வரியிறுதியில் வெறும் வெளியாக விடக் கூடாது. அந்த வெளிக்குரிய இடத்தை சொற் களுக்கிடையில் பிரித்துப் போட வேண்டும். இவ்வாறு பிரித்துப் போடும்போது வரியில் உள்ள சொற்களுக் கிடையில் விடப்படும் இடைவெளிகள் அனைத்தும் ஒரே அளவினதாக (equal Space) இருக்கும்படி அமைக்க வேண்டும். ஒர் இடைவெளி சிறிதாகவும், மற்றொன்று பெரி தாகவும் இருக்குமானால், அது பார்க்க நன்றாக இராது. எனவே ஒரே அளவு இடைவெளிகளாக அமைத்துக் கோக்க வேண்டும்.