பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. 37 ஒவ்வொரு சொற்றொடர் முடிவிலும் முற்றுப்புள்ளி வைக்கிறோம். இந்த முற்றுப் புள்ளியை அடுத்தாற். போல் அடுத்த சொல் தொடங்குமுன் ஒர் எம் இடை வெளி விடுதல் வேண்டும். சொற்றொடரின் நடுவில் காற்புள்ளி, அரைப்புள்ளி: முக்காற் புள்ளி; ஆகிய வற்றை யடுத்து அரை எம் இடைவெளி விடுதல் வேண்டும். ஒரு பத்தியின் நடுவில் பிறர் கூற்றாக வரும் சொற் களோ, சொற்றொடரோ தொடங்கும் இடத்திலும் முடியும் இடத்திலும்" இரட்டை மேற்கோள்' குறியிட வேண்டும். கூற்றுக்குள் கூற்றாக வரும் இடங்களில் 'ஒற்றை மேற்கோள் குறியிடுதல் வேண்டும். எடுத்துக் காட்டுச் சொற்றொடர்களுக்கும், பாடல்களுக்கும் 'இரட்டை மேற்கோள்' குறிகளை தொடக்கத்திலும் முடிவிலும் இடுதல் வேண்டும். ஒரு சொல்லின் பொருளோ, குறிப்புப் பொருளோ, அதன் பொருள் பிறமொழியிலோ அடுத்து வரும்போது அதைப் பிறையடைப்புக்குள் (Brace) போடுதல் வேண்டும். நாடகம் போன்றவற்றில் உறுப்பினர்களின் பேச்சுக் கிடையில் அவர்கள் செயல்களையும், நிகழ்ச்சிகளையும் குறிப்பிடும் இடங்களில் சதுர அடைப்புக்களைப் பயன் цGrigovтib (Brackets). பார்ப்பதற்கு இரண்டு சொல் போல் தோன்றி, ஆனால், அந்த இரண்டும் சேர்ந்து ஒரு சொல்லின் பொருளே தரு மானால் அதற்கிடையே இடைவெளி போடக் கூடாது. அதை ஒரு சொல்லாகவே இணைத்துக் கோத்து அடுக்க வேண்டும். எடுத்துக்காட்டு : நடந்துகொண்டான், படியெடுத்தான், பயன்படுத்தினான், வரக்கூடும், உண்டாக்கப்பட்டது, வேறுபாடு, படக்கட்டை.