பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42


முதல் வரிக்கும் இடையில் ஒர் எம் சக்கையொன்றைத் திணிக்க வேண்டும்.

பக்கத்தின் தலைப்பில் மையத்தில் பக்கஎண்ணை மட்டும் போடுவதுண்டு. பக்க எண்ணை இடது ஒரத்தில் போட்டு மையத்தில் புத்தகத் தலைப்பை அடுக்கிப் போடுவதும் உண்டு. புத்தகத் தலைப்பை மையத்தில் போடாமல் வலது ஓரத்தில் அடுக்கிப் போடுவதும் உண்டு. பிறகு இடைவெளித் தகடுகளையும், பத்திச் சக்கைகளையும் திணித்த பின், அளவு தகடு வைத்துப் பார்த்து இரண்டாவது பக்கத்தையும் நூலால் கட்டிவிட வேண்டும்.

மூன்றாவது பக்கம் கட்டும்போது, இரண்டாவது பக்க மையத்தில் பக்க எண் 2 போட்டிருந்தால், மூன்றாவது பக்கத் தொடங்கும்போது பக்க மையத்தில் எண் 3 போட்டுத் தொடங்க வேண்டும். இரண்டாவது பக்கத் தலை மையத்தில் புத்தகத் தலைப்பைப் போட்டிருந்தால் மூன்றாவது பக்கத் தலை மையத்தில் கட்டுரைத் தலைப்பை அடுக்கிப் போடலாம்.

இரண்டாவது பக்க வலப்பக்க ஒரத்தில் புத்தகத் தலைப்புப் போட்டிருந்தால், மூன்றாவது பக்க இடது ஒரத்தில் கட்டுரைத் தலைப்பை அடுக்கிப் போடவேண்டும். இவ்வாறு பக்கத் தலைப்பு வரி செய்த பின் ஓர் எம் சக்கை போட்டு, பிறகு வரிகளுக்கிடையே ஈயத்தகடுகள் திணித்தும் பத்திச் சக்கைகள் திணித்தும், அளவு தகட்டினால் பக்கம் அளவு பார்த்து நூல் கட்டுதல் வேண்டும்.


இரண்டாவது பக்கத்தைப் போலவே இரட்டைப்படை எண்ணுள்ள ஒவ்வொரு பக்கமும் அமையவேண்டும். மூன்றாவது பக்கத்தைப் போலவே ஒற்றைப்படை எண்ணுள்ள ஒவ்வொரு பக்கமும் அமையவேண்டும். இவ்வாறு 16 பக்கங்கள் செய்துவிட்டால் ஒரு படிவம் உருவாகிவிட்டது என்று பொருள்.