பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

17வது பக்கத்தில் இரண்டாவது படிவம் தொடங்குகிறது. இது இரண்டாவது படிவம் என்பதைக் குறிக்க 17வது பக்கத்தின் அடியில் 35 எம் அளவு வரிகள் அமைத்து முடிந்த பின் ஓர் எம் இடைவெளி விட்டு இடது ஓரத்தில் நூலின் தலைப்பின் முதல் எழுத்தைப் போட்டு, அருகில் ஒர் எம் கோடு ஒன்று போட்டு 2 என்று எண்ணிடவேண்டும். அதன் பிறகே 17வது பக்கத்தைக் கட்டவேண்டும். இப்படியே ஒவ்வொரு படிவத் தொடக்கத்திலும் படிவ எண் போட்டு வரவேண்டும்.

புத்தகத்தின் தலைப்பு “பாரதிதாசன்” என்று இருந்தால் படிவ எண்கள் பா-2, பா-3, பா-4, பா-5 என்று அமைத்தல் வேண்டும்.

ஒவ்வொரு 16 பக்கமும் கட்டப்பட்டபின் மெய்ப்பு எடுத்து, மெய்ப்புத் திருத்துபவர் அல்லது நூலாசிரியருக்குப் பிழை திருத்துமாறு அனுப்பவேண்டும். திருத்தி வந்தபின், படிவத்தில் உள்ள பிழைகளைக் களைதல் வேண்டும். பிழை களைந்தபின் அப்படிவத்தை அச்சிடலாம்.

ஒரு பக்கத்தின் அளவை நாம் அச்சுப்பரப்பு (Print area) என்று குறிப்பிடுகிறோம்.

1/8 கிரவுன் அளவுள்ள புத்தகத்தின் ஒரு பக்க அச்சுப் பரப்பு (Print area) 22 எம் X 35 எம் ஆகும்.

1/8 டெம்மி அளவுள்ள புத்தகத்தின் ஒரு பக்க அச்சுப் பரப்பு 24 எம் X 42 எம் ஆகும்.

1/8 ராயல் அளவுள்ள புத்தகத்தின் ஒரு பக்க அச்சுப் பரப்பு 28 எம் X 48 எம் ஆகும்.

1/4 கிரவுன் அளவுள்ள புத்தகத்தின் ஒரு பக்க அச்சுப் பரப்பு 35 எம் X 48 எம் ஆகும்.