பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


1/4 டெம்மி அளவுள்ள புத்தகத்தின் ஒரு பக்க அச்சுப் பரப்பு 42 எம் X 54 எம் ஆகும். 118 கிரவுன், 1/8 டெம்மி அளவுள்ள புத்தகங்களில் 16 பக்கம் கொண்டது ஒரு படிவம் ஆகும். 1/8 ராயல், 1/4 கிரவுன், 1/4 டெம்மி அளவுள்ள புத்தகங் களில் 8 பக்கம் கொண்டது ஒரு படிவம் ஆகும். பக்கம் கட்டும்போது ஒரு பத்திக்கும் மற்றொரு பத்திக்கும் இடையில் தனி வரியாக ஒரு துணைத் தலைப்பு வருமானால் அத்தலைப்புக்கு மேலே ஒரு எம் இடைவெளியும் தலைப்புக்குக் கீழே 1/2 எம் இடைவெளியும் விடுதல் வேண்டும். ஒரு பக்கத்தில் அடிக்குறிப்புகள் வருமானால், அந்தக் குறிப்புக்கு மேலே ஒரு மெல்லிய கோடு இடவேண்டும், அல்லது ஒரு எம் இடைவெளி விடுதல் வேண்டும். முதல் பக்கம் தொடங்கும்போது தலையில் எட்டு எம் வெளி விட்டுத் தொடங்குவது போலவே, உள்ளே வரும் ஒவ்வொரு தலைப்புப் பக்கத்திலும் தலையில் எட்டு எம் இடைவெளி விட்டுத் தொடங்க வேண்டும். உள் தலைப்புப் பக்கங்களில் 4எம் இடைவெளி விட்டுத் தொடங்குதலும் உண்டு. தலைப்புப் பக்கங்கள் வரும்போது அப்பக்கங்களில் பக்க எண் அச்சிடுவதில்லை. இது மரபாக இருந்து வருகிறது. பக்க எண்களைத் தலையில் அச்சிடும் புத்தகங்களிலேயே இந்த மரபு பின்பற்றப் படுகிறது. பக்கத்தின் அடிப்புறத்தில் பக்க எண் அச்சிடும் புத்தகங்களில் தலைப்புப் பக்கங்களிலும் பக்க எண் அச்சிடுவதே வழக்கம். ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் மிகுதிப்படும் இடத்தை இடைவெளிக் கட்டைகளைக் கொண்டு நிரப்பிப் பக்க அளவுப் படி பக்கம் கட்டி வைத்தல் வேண்டும். கட்டி வைத்த பக்கங்கள் அனைத்தும் 35 எம் நீளம் உடையனவாக இருத்தல் வேண்டும்.