பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

பக்கம் கட்டுபவர், ஒரு படிவம் முடிந்தவுடன், அந்தப் படிவம் எந்த வரியில் எந்த எழுத்தில் முடிகிறதோ அந்த எழுத்தின் பக்கத்தில் ஓர் அடையாளம் இட்டு, மூலப்படியில் குறியிட்டு, அடுத்துத் தொடங்க வேண்டிய பக்க எண்ணும் படிவ எண்ணும் குறித்து வைக்க வேண்டும்.

16ம் பக்கம் முடியும் இடத்தில் மூலப்படியில் குறியிட்டு 17/2 என்று எழுதி வைக்க வேண்டும்.

32வது பக்க எண் முடியும் இடத்தில் மூலப்படியில் குறியிட்டு 33/3 என்று எழுதி வைக்கவேண்டும்.

இப்படியே ஒவ்வொரு படிவ முடிவிலும் குறித்து வைத்தால், அடுத்த படிவம் பக்கம் கட்டத் தொடங்கும்போது, குறியிட்ட இடத்திலிருந்து கட்டத் தொடங்கலாம். இதனால் புத்தகத்தின் தொடர்ச்சி தவறாதிருக்கும். மூலப்படியில் குறிப்பிடுவதோடு அடுக்கு தட்டிலும் சுண்ணக் கட்டியினால் குறித்து வைக்க வேண்டும்.

முதல் பக்கத்திலிருந்து பக்க எண் கொடுத்துவரும் புத்தகங்களில் இரண்டாம் படிவம் 17ம் பக்கத்திலும் மூன்றாம் படிவம் 33ம் பக்கத்திலும் நான்காம் படிவம் 49-பக்கத்திலும் இப்படியே தொடங்கி வரும்.

சிலர் புத்தகத் தலைப்புக்காகவும் முன்னுரைக்காகவும் முதல் 4 பக்கங்கள் கடைசியில் செய்து கொள்ளலாம் என்று விட்டு விட்டு 5ம் பக்கத்திலிருந்து நூல் தொடங்குவார்கள். இப்படிப்பட்ட புத்தகங்களில் இரண்டாம் படிவம் 21ம் பக்கமும், மூன்றாம் படிவம் 37-ம் பக்கமும் இப்படியே 16 பக்க இடைவெளி விட்டு அடுத்தடுத்த படிவங்கள் தொடங்கும்.

சிலர் புத்தகத் தலைப்புக்காகவும் முன்னுரைக்காகவும் முதல் 8 பக்கம் ஒதுக்கிவிட்டு 9ம் பக்கத்திலிருந்து நூல்