பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


வார்கள். இந்த புத்தகங்களில் 25ம் பக்கம் இரண்டாம் படிவமும், 41ஆம் பக்கம் மூன்றாம் படிவமும் இப்படியே 16 பக்க இடைவெளி விட்டு அடுத்த படிவங்கள் தொடங்கும். பக்கம் கட்டுபவர், ஒரு படிவத்திற்கு ஐந்து அடுக்கு தட்டுகளை எடுத்துக் கையாளுவதால், ஒவ்வோர் அடுக்கு தட்டு முடிந்து அடுத்த அடுக்குதட்டை எடுத்துக் கொள்ளும் போதெல்லாம், தொடர்ச்சி சரியாக இருக்கிறதா என்று மூலப்படியை வைத்துச் சரி பார்த்துக் கொள்ளவேண்டும். அடுக்கு தட்டுகளை மாற்றி எடுத்துவிட்டால், தொடர்ச்சி கெட்டுப் போய்விடும். செய்யும் வேலையே பயனற்றுப் போகும். ஆகவே, சரி பார்த்த பிறகுதான் தொடர்ந்து பக்கம் கட்டுதல் வேண்டும். அதுபோலவே, படிவம் தொடரும் போதும், மூலப்படியில் குறித்து வைத்துள்ள இடத்தை ஒப்பிட்டுப் பார்த்துத்தான் வேலை தொடரவேண்டும். பக்கம் கட்டத் தொடங்கும் போதே, அடுக்கு மெய்ப்பு களில் திருத்தப்பட்ட பிழைகளை, அச்சுக்கோப்போர் திருத்தி விட்டார்களா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவேண்டும். கட்டப்பட்ட பக்கங்களை மெய்ப்பு எடுத்தபின், மெய்ப்பு எடுப்பதற்காகத் தடவிய மையை, மண்ணெண்ணெய் இட்டுத் துடைத்துவிட்டு, தட்டந்தாங்கிகளில் (galley racks) வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். பக்க மெய்ப்புக்கள் (Page Proof) படிக்கப் பெற்றுத் திருத்தங்கள் குறிப்பிட்டு வந்த பின், அப்பிழைகளைத் திருத்தி வைக்க வேண்டும்.