பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. படிவம் முடுக்குதல் FORM MAKING பதினாறு பக்கங்கள் கொண்டது ஒரு படிவம் எனப் படும். (1/8 கிரவுன் அளவில் அல்லது 118 டெம்மி அளவில்) பதினாறு பக்கங்களும் மெய்ப்புப் பார்த்துப் பிழை திருத்தியபின் படிவக் கல்லுக்குக் (Stone) கொண்டு செல்ல வேண்டும். இப்போது நாம் 118 கிரவுன் அளவுள்ள படிவத்தைப் பற்றி அறிவோம். படிவக்கல்லில் 16 பக்கங்களையும் கீழே காட்டியுள்ளபடி வைக்க வேண்டும். 2 SI 切I 9. 7 10 11 6 8 б. ZI ҫ l 16 13 4 பக்கங்களை அமைத்தபின் படிவச் சட்டத்தைக் (Chase) கொண்டு வந்து வைத்தல் வேண்டும். படிவச் சட்டம் இரும் பினால் ஆனது. கீழ்க்கண்டவாறு, அமைந்திருக்கும்.