பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


குறுக்கு மையத்தின் அளவு 10 ளம் நெடுக்கு மையத்தின் அளவு 9 எம் இவ்வாறு பக்கங்களின் ஊடே கட்டைகள் வைத்த பின் பக்கங்களைக் கட்டியுள்ள நூலை அவிழ்த்துவிட்டு, பக்கங் களைப் பக்குவமாக மையப் புறங்களை நோக்கி யணைத்து, எட்டுப் புறங்களிலும் வால் சக்கைகளை வைத்து மீண்டும் அணைத்து வைத்தல் வேண்டும். வால் சக்கைகள் ஒரு புறம் சீராகவும், ஒரு புறம் சாய்வாகவும் இருக்கும். படிவச் சட்டத்தின் மையப் புறத்தில் அகலமான பகுதியும் மூலைப் பகுதியில் குறுகிய பகுதியும் இருக்கும்படி வைக்க வேண்டும். பிறகு முடுக்குத் துண்டுகளை (Quoins) வால் சக்கைகளுக்கும் படிவச் சட்டத்தின் ஒரங்களுக்கும் இடையில் வைத்து முடுக் குதல் வேண்டும். இந்த முடுக்குத் துண்டுகள் தோதகக்தி மரத்தில் ஒரு புறம் அகலமும் ஒரு புறம் குறுகியுமுள்ள சிறு சிறு துண்டுகளாகச் செய்யப் பட்டிருக்கும். வால் சக்கைக்கும் படிவச் சட்டத்தின் ஓரச் சட்டத்திற்கும் இடையில் முடுக்குத் துண்டை வைக்க வேண்டும். குறுகிய பகுதி மேல் நோக்கி வைத்துக் கையினால் அழுத்தி விடவேண்டும். பிறகு முடுக்குக் கட்டை (Shooting) யினால் மரச்சுத்தி (Mallet) கொண்டு அடித்து இந்த முடுக்குத் துண்டுகளை மேலேற்றி நான்கு புறத்திலும் முடுக்குதல் வேண்டும். பக்கங்கள் இறுகி அழுத்திய பின் படிவச் சட்டத்தைக் கல்லிலிருந்து கீழிறக்கி அச்சுப் பொறிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். முடுக்குக் கட்டை (Shooting) என்பது ஆப்புக்கட்டை போல் சிறியதாக இருக்கும். இதன் குறுகிய பகுதியை முடுக்குத் துண்டின் மேல் அழுத்தியவாறு இதன் அகன்ற மேல் உச்சியில் மரச் சுத்தியினால் அடிக்க அடிக்க அது வால் சக்கையின் அகன்ற மேற்புறத்தை நோக்கி நகர்ந்து, பக்கங்களை அழுத்திக் கொள்ளும். இதன் அழுத்தத்திலேயே, 16 பக்கங்களும் படிவச் சட்டத்தில் ஒரே படிவமாக நிற்கின்றன.