பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பல்வகை வேலைகள் JOBS இதுவரை நாம் புத்தகம் அச்சுக்கோத்தல் பற்றியே பார்த்தோம். அச்சகத்தில் புத்தகம் செய்வது மட்டும் வேலையல்ல. வேறு பல்வகை வேலைகளே இன்றியமை யாதவை. அவை தொடர்ந்து கிடைக்கும்வேலைகள் என்றும் பருவ கால வேலைகள் என்றும் இருவகைப்படும். தொடர்ந்து கிடைக்கும் வேலைகள் என்பவை மடல்தாள்கள், விளம்பரங்கள், பட்டியல்கள், கணக்குப் புத்தகங்கள், பற்றுச் சீட்டுகள், பெறுகைச் சீட்டுகள், சுவரொட்டிகள், துண்டறிக் கைகள், கூட்ட அழைப்புகள், இன்னும் பலப் பல. பருவ கால வேலைகள் என்பவை திருமண அழைப்புகள். பொங்கல் வாழ்த்துகள், தீபாவளி வாழ்த்துகள், நாள் காட்டிகள், காதணி விழா அழைப்புகள், மேலும் பல. பலவகை வேலைகள் என்று குறிப்பிடும் போதே பல வகைகளாக, வேறு வேறு முறைகளில் செய்யவேண்டியவை என்ற பொருள் தொக்கி நிற்கிறது. எனவே ஒரு அச்சுக் கோப்பாளர் இந்த வேலைகளை மேற்கொள்ளும்போது தம்மை ஒரு படைப்பாளராக ஆக்கிக் கொள்ளவேண்டும். நல்ல கற்பனைத் திறமும், புதுப் புது வேலைகளைச் செய்யும் நுட்ப ஆற்றலும் எதையும் கலை நோக்கோடு செய்யும் மனப் பான்மையும், ஊக்கமும் சுறுசுறுப்பும் உடையவராக இருக்க வேண்டும்.