பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


ஒரு மடல் தாளையே இப்படிப் பல விதங்களிலும் இன்னும் பத்து விதங்களிலும் அச்சிடலாம். இதனைத்தான் காட்சியமைப்பு (Display) என்று கூறுகிறோம். இப்படி ஒவ்வொரு வேலையிலும் புதுப் புது மாதிரிகளைச் செய்து, புதுமையைப் புகுத்தவேண்டும். ஒரு திருமண அழைப்பைச் செய்யவேண்டும் என்றால் அதற்காகப் பயன்படுத்தும் அச்செழுத்துக்களின் வடிவம், அளவு, வகை ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு புதுமை நோக்கம் இருக்க வேண்டும். அந்த அழைப்பு எப்படி அமைய வேண்டும். என்ற கற்பனைக் கண்ணோட்டம் இருக்க வேண்டும். பார்த்தவுடன் பளிச்சென்று எடுப்பாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவேண்டும். எந்த அளவு தாளில் செய்யவேண்டும் என்று முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் டெம்மி 116 அளவு தாளில் தான் பெரும்பாலானவர்கள் திருமண அழைப்பைச் செய்யச் சொல்லுவார்கள். இந்தத் தாளின் அளவு 9'X7; ஆகும். இதனை எம் கணக்கில் பார்த்தால் 54 எம்.X 46 எம் ஆகின்றது தாளின் அகலம் 46எம் இரண்டு பக்கமும் ஒரவெளி (Margin) 5 எம் விட வேண்டும் எம்-5 எம்=10எம். 10எம் கழித்தால் நாம் 36எம் அளவுக்கு கோத்தல் வேண்டும். பொதுவாக 35எம் அளவில் தான் அச்சகங்களில் வரி வெளிகள் (lead) இருக்கும். ஆதலால் 35எம் அளவுக்கே அச்சுக்கோத்திடல் வேண்டும். ஒரவெளி (Margin) அளவை 5; எம் ஆக வைத்துக் கொள்ளலாம். அகலம் 35எம் எனத் தீர்மானித்த பின் அழைப்பின் நீளம் அல்லது உயரத்தைத் தீர்மானிக்கவேண்டும். உயரம் 54எம். இதில் மேலும் கீழும் 5எம் ஒரவெளி (Margin) விட்டபின் கிடைப்பது 44எம். எனவே நாம் செய்யும் வேலையின் உயரம் 44எம் ஆக இருக்கவேண்டும். இந்த 44னம் அளவுக்குள் அடங் கும்படியாக, உரிய எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வரிகளைக் கோத்து அடுக்கவேண்டும். திருமண