பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


அழைப்பு என்ற தலைப்பை 24 புள்ளி அல்லது 18 புள்ளி தடித்த எழுத்தில் செய்தல்வேண்டும். மணமகனின் பெயரை யும், மணமகளின் பெயரையும் 12 அல்லது 14 புள்ளி தடித்த எழுத்து அல்லது பரு எழுத்தில் செய்யவேண்டும். அழைப்ப வரின் பெயர் 12 புள்ளி தடித்த எழுத்திலும் அவ்வண்ணமே விரும்பும் உறவினர்களின் பெயர் 12 அல்லது 10 புள்ளி தடித்த அல்லது பரு எழுத்தில் போடுதல்வேண்டும். சொற்றொடர் களை 12 புள்ளி சாய்வு எழுத்துக்களில் கோத்தல் வேண்டும். மேற்சொன்ன விளக்கம் பொதுவானது. வேலை கொடுப்ப வர்கள், கருத்துக்களையும் கேட்டு அறிந்து அச்சகத்தில் உள்ள எழுத்துக்களின் வடிவ அட்டவணையைக் காட்டி அவர்கள் விருப்பப்படி எழுத்துக்களை அமைத்துக்கொடுப்பது மன நிறைவான வேலையாகும். திருமண அழைப்பை இரண்டு வண்ணத்தில் அச்சிட நேரிடும்போது "வண்ணம் பிரித்தல் (Colour Scperation) செய்தல் வேண்டும். எந்த எந்த எழுத்துக்கள் இரண்டாவது வண்ணத்தில் வரவேண்டுமோ அந்த எழுத்துக்களைச் செய்துவைத்த வேலை"யிலிருந்து பிரித்து எடுத்துத் தனியே வைத்துக் கொள்ளவேண்டும். அந்த எழுத்துக்கள் இருந்த இடத்தை, அந்த எழுத்துக்கள் எத்தனை புள்ளியோ அத்தனை புள்ளி யுள்ள வெளிக் கட்டைகளையெடுத்து நிரப்பி விடவேண்டும். வண்ணம் பிரித்தெடுத்த எழுத்துக்களை, முன் செய் திருக்கும் வேலை அளவுக்கு மற்றொரு முறை கட்ட வெளி களையும் (Quotations) வெளிக்கட்டைகளையும் (Quads) அடுக்கிக் கொண்டு, வண்ண வரிகளை உரிய இடங்களில் சேர்க்கவேண்டும். அப்படிச் சேர்க்கும்போது ஒரு வண்ண வரிக்கும் மற்றொரு வரிக்கும், முதல் வேலையில் உள்ள இடைவெளித் தொலைவைப் பார்த்து அதே இடைவெளி சரி