பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


யாக அமையச் செய்யவேண்டும். பொதுவாக ஒரு திருமண அழைப்பில், 'திருமண அழைப்பு’ என்ற தலைப்பும், மண மக்கள் பெயரும், தந்தை பெயரும், உறவினர் பெயரும், சுற்றிலும் கட்டுகின்ற ஓரச் சித்திரங்களும் (Borders) மற்றொரு வண்ணத்தில் அமைப்பது வழக்கமாகும். அடுத்து ஒரு பட்டியல் எப்படிச் செய்வது என்று பார்ப்போம். பட்டியலின் அளவு டெம்மி 1/8 என்று வைத்துக் கொள்வோம். 118 தாளின் அளவு 5;"X8;" ஆகும். அச்சகக் கணக்கில் 33.எம்x51ளம் ஆகும். ஒரவெளி 5எம் வீதம் வலம் இடம் இருபுறமும் 10எம் போக 23.எம் அகலத்திற்கு வேலை’ அமைத்துக் கொள்ளவேண்டும். பொதுவாக வரிவெளித் தகடுகள் 24எம் அளவேயிருக்குமாதலால் 24எம் அளவு, வைத்துக் கொள்ளலாம். பட்டியலாக இருப்பதால் உள்ளே எழுதும் இடம் சற்று மிகுதியாக இருத்தல் நன்று என்று நினைத்தால் 28எம் அளவு அகலம் வைத்துக் கொள்ளலாம். 28எம் போனால் ஒரவெளி இருபுறமும் 24எம் அளவுதான். இருக்கும். பட்டியலில் தலைப்பக்கம், தையலுக்கும், பட்டியலைக் கிழிப்பதற்குரிய புள்ளி குத்துவதற்கும் இடம் வேண்டுமாதலால் 6எம் இடைவெளியும், வால்பக்கம் 5எம் இடைவெளியும் விட்டபின் 40எம் மிஞ்சுகிறது. இதைப் பட்டியலின் உயர அளவாகக் கொண்டு அமைக்க வேண்டும். தொடங்கும் போது, முதல் வரி நடுவில் பட்டியல்’ என்ற தலைப்பை 12 புள்ளி தடி எழுத்தில் போட்டுக் கீழே ஒரு கோடு அமைக்கவேண்டும். கோடு எட்டு எம் அகலம் இருக்கிறதென்றால், 10எம் அளவுள்ள இரண்டு வரித் தகடுகளை வெட்டிக் கொண்டு கோட்டின் இருபுறமும் போட்டுவிட்டால் 28ம் நீளத்திற்கு அந்த வரி வெளி சரியாக