பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.அச்சிடுதல்


                              PRINTING

அச்சிடுதல் என்பது தான் அச்சகத்தின் சிறப்பான பணி. அச்சிடுவதற்கு முன் செய்ய வேண்டியவற்றைப் பற்றி இது வரை கூறினோம். இப்போது அச்சகத்தின் பணியாகிய அச்சிடுதலைப் பற்றிப் பார்ப்போம்,

அச்சிடுதல் என்ற பணி மூன்று முறைகளில் கையாளப்படுகிறது. மூன்று கட்டங்களாக அது வளர்ந்திருக்கிறது என்று சொல்வது பொருந்தும். தொடக்க காலத்தில் இருப்புத்தட்டு ஒன்றில் அச்சிட வேண்டிய எழுத்துக்களை வைத்து மற்றொரு தட்டுப் போன்ற படுக்கையில் தாளை வைத்து அழுத்தி அச்சிடுவது வழக்கமாய் இருந்தது.

இதைத் தட்டச்சு முறை என்கிறார்கள். அடுத்து, அச்செழுத்துக்கள் ஒரு தட்டில் முடுக்கி வைத்திருக்க மேலே ஓர் உருளையின் வட்டப்பகுதியில் தாளை வைத்து அழுத்தும் முறையில் அச்சிடும் தொழில் முன்னேறியது.இது உருளை யச்சு முறை எனப்பட்டது. இதில் அச்சிடுவது விரைவு படுத்தப்பட்டது. எனவே இது ஒரு படி முன்னேற்றம் என்று சொல்ல வேண்டும். அடுத்தபடியாக தாள் ஓர் உருளையில் வர, மற்றோர் உருளையில் அச்செழுத்துக்கள் இருக்க இரண்டும் சுழன்று அழுத்திச் அச்சிடும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இது சுழல்