பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


அச்சு முறை எனப்பட்டது. இது மிக மிக விரைவாக அச்சிடக் கூடிய முறையாதலின் இது பெரு முன்னேற்றம் ஆகும்.: அச்சடிக்ம்ே இறைகள் ப டச்சு ০১-৫ কেপ wওঁ গ Plater. Cعاها الاتy முதலில் நாம் தட்டச்சு முறை பற்றிக் காண்போம். பல் வகைச் சிறு அச்சு வேலைகள் நடைபெற இந்தத் தட்டச்சு முறை பயன்படுகிறது. இப்படி அச்சிடும் பொறி தட்டச்சுப் பொறி (Platen press) என்றோ, மிதியச்சுப் பொறி (Treadle Machine) என்றோ அழைக்கப்படுகிறது. ஒரு மடல் தாள், அல்லது பட்டியல், அல்லது திருமண அழைப்புப் போன்ற ஒரு வேலையை அச்சுக்கோத்து முடிந்த பின், அதை முடுக்கிக் கொள்ளவேண்டும். இதற்கென்று உள்ள சட்டத்தில் (Chase) முடுக்க வேண்டும். அச்சிட வேண்டிய கோப்புப் பொருள், சட்டத்தின் மேல் நடுப் பகுதியில் அமையும்படி வைத்துக் கொள்ளவேண்டும். கோப்புப் பொருளின் தலைப்பகுதியில் சட்டத்திற்கும் பொருளுக்கும் இடையில் கட்டைகளைத் தேவையான அளவு அடுக்கிக் கொள்ளவேண்டும். இக்கட்டைகளுக்கு இடையே இரண்டு அல்லது மூன்று கட்டவெளிகளை (Quotations) வைத்து அணைத்துக் கொள்ளவேண்டும். இதுபோலவே