பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63


இடது பக்கத்தில் கட்டைகளை அடுக்கி பொருளையனைத்து வைக்கவேண்டும். பொருளின் வால் பகுதியிலும், வலது பகுதியிலும் சில கட்டைகளையடுக்கிக் கொண்டு, பொருளை யணைத்தபடி வால் புறம் ஒன்றும், வலதுபுறம் ஒன்றுமாக இரண்டு வால் சக்கைகளை வைத்துக் கொள்ளவேண்டும். வால் சக்கைக்கும் அடுத்துள்ள கட்டைக்கும் இடையில் முடுக்குத் துண்டங்களை வைத்து அடித்து முடுக்கிக் கொள்ள வேண்டும். அடுத்த படியாக, படுக்கை தயாரித்துக் கொள்ள வேண்டும். படுக்கை என்பதுதான் அச்சுப் பதியும் இடம். لالر . ல அச்சுதாங்கி தட்டச்சு • i

படுக்கைப் பகுதி (Bed) அச்சுப் பொருளுக்கு நேர் எதிரில் உள்ளதாகும். இது ஒரு நீண்ட சதுரமான இரும்புத் தட்டாகும். இதன் மேல் இரண்டு மூன்று அட்டைகளை வைத்துக் கொள்ளவேண்டும். இந்த அட்டைகளுக்கு மேலே புதிய தாள்களை வைத்து இப்படுக்கையின் மேலும் கீழும்