பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


குண்டூசிகளை எப்பொழுதும் தலை வலது புறம் சாய்ந்தபடி இருக்குமாறு குத்த வேண்டும். ஆயிரம் படிகளுக்கு மேற்படுமானால், குண்டூசி குத்தியுள்ள இடத்தின் அருகில், இரண்டு எம் வெளிக் கட்டைகள் (Quads) மூன்றை எடுத்து ஒரு புறத்தில் பசை தடவி, தாள் படியும் இடத்திற்குச் சரியாக ஒட்டிவிட வேண்டும். வெளிக்கட்டை நழுவி விடாமல் இருக்க அதன் மீதும் இரு புறமும் படியும்படியும், அதன் அகலத்திற்ரு ஒரு துண்டுத் தாளை வெட்டி ஒட்டி விடலாம். இப்படி மூன்று குண்டூசிகளின் அருகிலும் ஒட்டிவிட அவை நழுவாமல் நிற்கும். அவற்றின் மீது அச்சிட வேண்டிய தாள் தங்கி அச்சாகும்.

சில நேரங்களில் அச்சிடும் தாள், காற்றில் பறக்கக்கூடும். மையுடன் ஒட்டிக் கொண்டு மேலே வந்து உருளையில் சிக்கிக் கொள்ளக்கூடும். இவற்றைத் தடுப்பதற்காக விரல் தகடுகளைப் (fingers) பயன்படுத்துவதுண்டு. விரல் தகடுகள், படுக்கையின் அடிப்புறத்தில் அவற்றிற்கென்று அமைந்துள்ள நீண்ட துளையில், வேண்டிய இடத்தில் நகர்த்திக் கொள்ளுமாறு திருகிக் கொள்ளக் கூடியவை. இவை, படுக்கையின் குறுக்கு உயரத்திற்கு நீண்டு. ஒவ்வொரு முறை அச்சாகும் போதும் தாளுடன் படிந்து, தாள் மேலெழும்பாதவாறு தடுத்துக் கொள்ளும். இந்த விரல்களைப் பொருத்தும்போது இவை, கோப்புப் பொருளின் மீது படியாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு படிந்து விடுமானால், அந்த இடத்தில் உள்ள எழுத்துக்கள் நசுங்கி அவை மீண்டும் பயன் படாமல் கெட்டுப் போகும். வேலையும் கெடும். தாளின் அச்சாகாத பகுதிகளிலேயே இந்த விரல் தகடுகள் பதியுமாறு பார்த்து அமைத்தல் வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் அச்சுப்பொறி விரிந்து வரும் போது படுக்கையில், குண்டூசிகளின் இடையில் அச்சிட வேண்டிய தாளை வைத்தலும் வைக்குமுன் ஏற்கனவே