பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

கோப்புப் பொருளின் மேல் உருளை படியும் போது அதைச் சுற்றிக் கொண்டு வரும் தாளில் அச்சுப் படிகிறது.

உருளையச்சுப் பொறி இயங்கும் முறையை ஒரளவு பார்த்தோம்.

பொறியோட்டுபவர், ஒவ்வொரு நாள் வேலை தொடங்கு முன்னரும், பொறியின் மேற்பகுதிகளையெல்லாம் பருத்திக் கழிவினால் துடைத்துத் தூய்மைப் படுத்தவேண்டும். அதன் பிறகு, மூட்டுக்களிலும் இயங்கு பகுதிகளிலும் எண்ணெய் விட வேண்டும். அச்சுப் படிவதற்கான படுக்கையைச் சரிப்படுத்துதல் வேண்டும். உருளையின் மீது உள்ள துணிப்படுக்கையின் மீது, ஐந்து அல்லது ஆறு மென்மையானை தாள்களை வைத்து அடிப்பகுதியைப் பசை தடவி ஒட்டி, சுருக்கமின்றித் தாளைத் தடவிவிட்டு மற்றொரு ஓரத்தையும் ஒட்டிக் காய வைத்தல் வேண்டும்

அச்சிட வேண்டிய முகப்புப் பொருளைப் படிவச் சட்டத்துடன் கொண்டு வந்து தட்டில் முடுக்கிக் கொள்ள வேண்டும். முன் பகுதியில் தாள் தாங்கி மேற் பலகையை வைத்து மூடி, அதன் மேல் அச்சிட வேண்டிய தாளை வைத்துக் கொண்டு, விசையைத் தட்டிவிட்டுப் பொறியை இயங்கச் செய்ய வேண்டும். பத்துப் பதினைந்து முறை தட்டு முன்னும் பின்னும் ஓடி, மை இழைத்த பின், அழுத்தத் தடை (Impression Brake) யை நீக்கிவிட்டு, உருளை, கீழிறங்கச் செய்தல் வேண்டும். ஒவ்வொரு தாளாக எடுத்து, உருளை அருகில் நகர்த்தி வர வேண்டும். ஒவ்வொரு முறை உருளை சுழலத் தொடங்கும் போதும், அதில் உள்ள பற்கள், தாளைப்பற்றிக் கொண்டு சுழலும். அச்சுப் பதிந்த தாள், சுழன்று மேற்பகுதிக்கு வந்து, சிறிய உருளையின் மூலம் விசிறிக்குச் சுருட்டித் தள்ளப்படும், அச்சுப் பொறியின்