பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


இந்தத் தட்டின் இரு புறத்திலும் இரண்டு நீண்ட பல் சட்டங்கள் உள்ளன. இந்தப் பல் சட்டங்கள் தாம் மேலே யுள்ள யுருளையை இயக்குகின்றன. தட்டுப்பகுதி ஒவ்வொரு முறை பின் நோக்கிப் போகும் போதும் பற்களின் மீது உருளை சுழல்கிறது. உருளை சுழலும் போது அதன் மீது படிந்து வரும் தாளில்iஅச்சுப் படிகிறது. அச்சான தாளை மேலேயுள்ள மற்றொரு சிறு உருளை பற்றி இழுத்து மேற் புறம் கொண்டு செல்கிறது. அத்தாள் மேல் உருளையை யொட்டிப் படியும் விசிறியில் அமர்ந்து விசிறி மேலெம்பும் போது தூக்கிச் செல்லப்பட்டுப் பின்புறம் உள்ள பலகையில் விழுகிறது. அச்சுப் பொறியின் பின் கோடியில் நீண்ட மைத்தொட்டி யிருக்கிறது. இதில் பல சாவிகள் உள்ளன. இந்தச் சாவி களைத் திருகுவதன் மூலம் ஒவ்வோர் இடத்திலும் கூட்டியோ, குறைத்தோ வேண்டிய அளவு மையைப் பெற லாம். மைத் தொட்டியை ஒட்டினாற்போல் ஓர் இரும்பு உருளையுள்ளது. இதன் மூலம் தொட்டியில் உள்ள மை சுழன்று இறங்குகிறது. இதையடுத்தாற் போல் ஓர் மை யுருளை மேலும் கீழும் ஏறி இறங்குகிறது. ஏறும் பொழுது மேல் இரும்பு உருளையில் உள்ள மையைப் பெற்றுக் கொள் கிறது. இறங்கும் போது அதை மைத்தட்டில் தடவுகிறது. மைத் தட்டின் மீது குறுக்குச் சாய்வாக ஓர் மை யுருளை அசைகிறது. இது மைத் தட்டில் மை எங்கும் பரவும்படி செய்கிறது. மேலும் அடுத்துள்ள நான்கு மை யுருளைகள், மைத்தட்டின் மீதுள்ள மையை இழைப்பதுடன், தாமே பெற்று, பெற்ற மையை கோப்புப் பொருளின் மீது தடவி விடுகின்றன. கீழ்த்தட்டு ஒவ்வொரு முறை நகரும் போதும் மைத் தட்டில் உள்ள மை, கோப்புப் பொருளுக்குப் பரவுகின்றது.