பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

5. தாள் அணைப்பு விலகாது ஒரு கண்ணும், பொறி யோட்டத்தில் ஒரு கண்ணுமாக, வேறு சிந்தனைகளின்றித் தன் பணியைச் செவ்வனே முடித்தல் வேண்டும் என்ற ஒரே நினைப்புடன் பணி புரிய வேண்டும்.

6. அச்சுப் பொறியில் ஏதேனும் பழுது நேருமாயின், உடனடியாக அப்பழுதினைக் களைதல் வேண்டும். தன் அறிவுக்கும், ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட நிலையில் அப் பழுது நேர்ந்திருக்குமானால் பழுது பார்க்கும், பொறி வல்லுனரை அழைத்து வரச் செய்து, பழுதுபார்த்திட வேண்டும். தனக்குத் தெரிந்ததைச் செய்யாமல் இருக்கக் கூடாது. தனக்குத்தெரியாததைச் செய்யக் கூடாது. இது கடைப்பிடிக்க வேண்டிய இன்றியமையாத விதியாகும்.