பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மெய்ப்புத் திருத்துதல் PROOF READING அச்சுக் கோத்தபின், கோத்ததை மெய்ப்புப் பொறியில் வைத்துப் படியெடுத்தல் வேண்டும். இந்தப் படி மெய்ப்பு எனப்படும். glo-G) Quotiuily (Galley Proof) ušs Qudüllilų (Page Proof) Quitp) Qualiidil ! (Machine Proof) என மூன்று முறை மெய்ப்பு எடுத்துப் பிழை திருத்துதல் ைேண்டும். பிழைகள் மிகுதியாகத் தென்பட்டால் பக்க மெய்ப்பை இரு முறையும் பொறி மெய்ப்பை இருமுறையும் திருத்துதல் உண்டு. மெய்ப்பு என்றால் மெய்யான படி என்று பொருள் படும், பிழைகளைக் களைவதற்காகவே மெய்ப்புத் திருத்து கிறோம். 1. பிழைகள் எவ்வாறு ஏற்படுகின்றன? எழுத்துக்களை அச்சுப் பெட்டியில் பிரித்துப் போடும் போது, ஒரு குழிக்குப் பதில் மற்றொரு குழியில் தவறி விழுந்து விடுவதால் ஏற்படுகின்றன. 2. அச்சுக் கோப்பவர் கைத் தவறுதலால் பிழைகள் ஏற்படுகின்றன.