பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


3. அச்சுக் கோப்பவர் தகுந்த மொழிப்பயிற்சி இல்லாத வராக இருப்பதால் பிழைகள் ஏற்படுகின்றன. 4. அச்சுக் கோக்கும் கட்டுரை அல்லது கதையை எழுதிக் கொடுத்தவர் மொழிப் பயிற்சி இல்லாதவராக இருப்பதால் ஏற்படுகின்றன. 5. கையெழுத்துத் தெளிவாக இல்லாததால் ஏற்படு கின்றன. - இப்படி ஏற்படும் பிழைகள் மூன்று, நான்கு, ஐந்து முறை கள் மெய்ப்புத் திருத்திய பிறகும் நூல்களில் தங்கிவிடு கின்றன. ஐந்து முறை பிழை திருத்திய பிறகும், நூல்கள் பிழையோடு வெளிவருகின்றன. இதற்குரிய காரணங்களை நாம் ஆய்தல் வேண்டும். பிழையில்லாத நூல்கள் வெளி வரல் பாடுபட வேண்டும். பொதுவாக அச்சுப் பிழையைப் பேய் (Printer's Devil) என்று கூறுவதுண்டு. எத்தனை முறை பார்த்தாலும் கண்ணுக்குத் தப்பி அது அச்சாகி விடும். அதனால், கூர்ந்து பார்க்கும் கண்களுக்கு மாயமாய் மறைந்து நின்று அச்சாகி விடுவதால் அது மாயப் பேயாகவே திகழ்கிறது. ஆனால் இந்த மாயப் பேய், ஆங்கில நூல்களில் காணப்படுவதில்லை. தமிழில் மட்டுமே பெரும்பகுதி நூல்கள் பிழையோடு வெளி வருகின்றன. இதற்குப் பல காரணங்கள் உள. அவற்றுள் சிலவற்றை ஈண்டுக் குறிப்பிடுகிறோம். 1. அச்சுக் கோப்பவர் ஒரளவாவது கற்றவராக இருந் தால், செய்யும் போதே பிழையின்றிச் செய்ய முடியும் ஆனால், ஒரளவு கற்றவர்கள் ஊதியம் மிகுந்த பிற வேலை களுக்குப் போய் விடுவதால், அச்சுக் கோப்பாளராக வருவ தில்லை. வருகின்றவர்களில் பெரும்பாலோர் அடிப்படைக் கல்வியே இல்லாதவர்களாக உள்ளனர். எனவே, கோக்கும்