பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

போதே பிழைகள் மலிந்திருக்கின்றன. மெய்ப்புத் திருத்துபவர் பெருமுயற்சியெடுத்து இவற்றைத் திருத்த வேண்டியுள்ளது.

2. நூல் எழுதுபவர் கற்றவராக இருந்தால் எழுதுவது பிழையின்றி இருக்கும். நூலாசிரியரே கல்லாதவராக இருப்பதால், எழுதித் தரும் மூலப்படி பிழை மலிந்ததாய் உள்ளது. அந்தப் பிழைகளோடு, கல்லாதவராய் உள்ள அச்சுக் கோப்பவர் செய்யும் பிழைகளும் சேர்ந்து கொள்ளுகின்றன. இதனால் அந்த நூல் பிழை மலிந்து வெளிவருகிறது. அதைப் பிழைதிருத்த முனைபவருக்குப் புதிய ஐயங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அவர் கற்றிருந்தும் திரும்பத் திரும்பப் பிழைகளையே சந்திப்பதால், தம் கல்வியிலேயே அவருக்கு ஐயம் வந்து விடுகிறது. இப்படிப் பல பிழைகள் தேங்கி விடுகின்றன.

3. கொச்சை எழுத்தாளர்களால் எழுதப்படும் நூல்கள் பிழையாகவே வெளிவருகின்றன. இதில், அச்சுக் கோப்பவர், பிழை திருத்துபவர் இருவரும் கற்றவர்களாக இருந்தாலும் பயனில்லை. அது பிழையுள்ள நூலாகவே வெளிவர வேண்டுமென்று பிறப்பிலேயே அதன் தலைவிதி எழுதப்பட்டு விடுகிறது.

4. கற்றுத் துறைபோய அறிஞர்கள் எழுதும் கையெழுத்துக்கள் வீச்செழுத்துக்களாகவும், கூட்டெழுத்துக்களாகவும் இருப்பதால், அவற்றை யாரும் சரியாகப் படித்துப் புரிந்து கொள்ள முடிவதில்லை. கோப்பவரோ, திருத்துபவரோ, என்ன சொல்லென்று கண்டுபிடிக்க முடியாததால் அவை பிழையாக அச்சாகி விடுகின்றன. இந்த அறிஞர்கள் தம் நூல்களைத் தட்டச்சுச் செய்து, அதை ஒரு முறை படித்துத் திருத்திக் கொடுத்தால், திருத்தும் போதாவது தெளிவான கையெழுத்தில் திருத்தினால், நூல்கள் பிழையின்றி வெளிவரக் கூடும்.