பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81


முதல் பக்கத்தின் அடியில் படிவ எண் போட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். முன்படிவத் தொடர்ச்சி சரி பார்க்க வேண்டும். வரி வெளிகள், பத்தி வெளிகள், உள் தலைப்புகளுக்கு மேலும் கீழும் உள்ள வெளிகள் ஒழுங்காக அமைந்துள்ளனவா என்று பார்ர்க வேண்டும். தலைப்பு களுக்கும், உள் தலைப்புகளுக்கும் உரிய அச்சு வகைகள் அமைக்கப் பட்டுள்ளனவா என்று சரிபார்க்க வேண்டும். பொறி மெய்ப்பு (Machine Proof) பார்க்கும் போது, பக்க மெய்ப்பில் திருத்தப்பட்டவை சரியாகச் செய்யப் பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். பக்கத் தலைப் புறம், வாற்புரம், இரு ஓரங்கள் அனைத்தும் சரியான இடை வெளிகளுடன் உளளனவா எனப் பார்க்க வேண்டும். அச்சுப் படிவு எல்லாப் பக்கங்களிலும் தெளிவாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். பக்க எண்கள் மாறாமல் வரிசையாக உள்ளனவா என்று சரிபார்க்க வேண்டும். படிவத்தை மடித்துக் கொண்டு சரிபார்க்க வேண்டும். முன்னும் பின்னும் பக்கங்கள் ஒன்றின் மீது ஒன்று விலகாமல் அமைந் துள்ளனவா என்று பார்க்க வேண்டும். படிவ எண்ணையும் சரிபார்த்த பின்னரே அடிப்பாணை கொடுக்க வேண்டும். புத்தகம் அழகாகவும், பிழையில்லாமலும் அச்சாவது மெய்ப்புப் பார்ப்பவரின் கண்காணிப்பில் உள்ளது. எனவே, மெய்ப்புப் பார்ப்பவர் ஒரு நிறுவனத்தின் பணியாளராக மட்டுமல்லாமல், மொழிப் பணியாளராகவும், நாட்டுப் பணி யாளராகவும், நாட்டு வரலாற்றை உருவாக்கும் பணியாள ராகவும் உள்ளார். இதை அவர் கடமையுணர்வோடு செய்தல் வேண்டும். அ-6