பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


இரண்டாந்தர மூன்றாந்தர ஆசிரியர்களின் நூல்களைத் திருத்தும் போது, மூலப்படியிலேயே தவறாக இருக்கிற தென்று தெளிவாக-ஐயத்திற்கிடமின்றித் தெரியுமானால், அதைத் துணிந்து திருத்திவிட வேண்டும். இவ்வாறு ஒரு தவற்றைத் திருத்துவதால், அந்த ஆசிரியரின் மானத்தையும், நூலின் தரத்தையும் காப்பாற்றியவர்களாகிறோம். மொழித் தொண்டு செய்த மனநிறைவும் ஏற்படுகிறது. நான்காந்தர ஆசிரியர்கள் சிலர் இருக்கிறார்கள். இவர்கள், தாமும் சரியாக எழுதமாட்டார்கள். திருத்து வதையும் திருத்தவிட மாட்டார்கள். இப்படிப்பட்டவர் களின் நூல்களைத் திருத்தும் பணியை ஒப்புக் கொள்ளாமல், இருப்பதே சிறப்பு. மொழிக் கொலைக்கு உடந்தையாகாமல் இருப்பது உயர்வு தரும். தட்டு மெய்ப்புப் (Galley Proof) பார்க்கும் போது ஒருவர் படிக்க ஒருவர் திருத்தி வருவது நன்று. விட்டுப் போன பகுதிகளைக் கண்டுபிடித்துச் சேர்த்து விடலாம். ஏதேனும் மாற்றங்கள் செய்வதாக இருந்தாலும் இந்த நிலையிலேயே செய்து விடுவது நல்லது. பக்க மெய்ப்பிலோ பொறி மெய்ப்பிலோ மாற்றங்கள், புதுச்சேர்க்கைகள் செய்வது பெருந்தொல்லையாக இருக்கும். வேலையின் விரைவு தளர்ந்து போகும். தட்டு மெய்ப்புகளைப் பார்த்துத் திருத்தியபின், அவற்றிற்கு வரிசை எண் கொடுப்பது நல்லது. பக்கம் கட்டும் போது தொடர்ச்சி விட்டுப் போகாமல் இருக்கும். தட்டு மெய்ப்பு முழுவதும் அச்சுக் கோப்பவர் திருத்திய பிறகுதான் பக்கம் கட்டக் கொடுக்க வேண்டும். பக்க மெய்ப்புகளை மீண்டும் படித்துப் பிழை திருத்த வேண்டும். தட்டு மெய்ப்பில் செய்த திருத்தங்கள் செய்யப் பட்டு விட்டனவா என்று ஒப்பு நோக்குதல் வேண்டும். அதன் பிறகு படித்துத் திருத்த வேண்டும். பக்க மெய்ப்பில்