பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


கேப் 34 செ.மீ X 43 செ.மீ. டபுள் கேப் 43 செ.மீ X 68 செ.மீ. ராயல் 35 செ.மீ X 50 செ.மீ. டபுள் ராயல் 50 செ.மீ X 70 செ.மீ. இந்த அளவுகளில் தாள்கள் கடைகளில் கிடைக்கின்றன. தாள்களின் எண்ணிக்கை கீழ்க்கண்டவாறு: 24 தாள்-ஓர் அடுக்கு (quire) 20 அடுக்கு-ஒரு கட்டு (ream) இந்தக் கணக்குப் படி ஒரு கட்டுக்கு 480 தாள் ஆகிறது. பல ஆலைகளில் ஒர் அடுக்குக்கு ஒருதாள் மிகையாக வைத்து ஒரு கட்டுக்கு 500 தாள் ஆகக் கட்டி அனுப்புகிறார்கள். இந்த 480 அல்லது 500 தாள் கொண்ட ஒரு கட்டின் எடையே தாளின் எடையாகக் குறிப்பிடப்படுகிறது. கடையில் நாம் ஒரு தாள் வாங்க வேண்டுமென்றால், அதைக் குறிப்பிட மேற்கண்ட ஐந்து தகவல்களையும் சேர்த்துச் சொல்லவேண்டும். முதலில் எத்தனை தாள் வேண்டும் என்பதைக் குறிப் பிட வேண்டும். இரண்டாவது எந்த ஆலையின் தாள் என்பதைக் குறிப் பிட வேண்டும். மூன்றாவது எந்த வகைத் தாள் என்பதைக் குறிப்பிட வேண்டும். - நான்காவது எந்த அளவு என்பதைக் குறிப்பிடவேண்டும். ஐந்தாவது அந்தத் தாளின் எடையைக் குறிப்பிட வேண்டும். இந்த ஐந்து குறிப்புகளில் ஒன்று குறைந்தாலும் நமக்கு வேண்டியது எந்தத் தாள் என்பதைச் சரியாகத் தெரிவிக்க முடியாது.