பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


1 அடுக்கு (குயர்) வெஸ்ட் கோஸ்ட் வெள்ளைத்தாள் டபுள் டெம்மி 16 கிலோ 5 அடுக்கு (குயர்) சேஷசாயி வண்ண அச்சுத்தாள் டெம்மி 6 கிலோ. 2 கட்டு (ரீம்) அமராவதி வெள்ளையச்சுத் தாள் டபுள் கிரவுன் 11.6 கிலோ இப்படி ஐந்து செய்திகளும் சேர்த்துக் கூறித்தான் நமக்கு வேண்டிய தாளைச் சரியாகப் பெறவேண்டும். சில்லரை வேலைகளுக்காக நாம் தாள்களைக் சிறிய அளவுகளில் வெட்டிக் கொள்கிறோம். ஒரு டெம்மி அளவுத் தாளை 4 துண்டுகளாக வெட்டிக் கொண்டால், அது டெம்மி 4 அளவு என்று கூறப்படும். இது போலவே எட்டுத் துண்டு களாக வெட்டி கொண்டால் டெம்மி 18 அளவு எனப்படும். இதுபோலவே 10 துண்டு 1/10 அளவு என்றும் 6 துண்டு 1/6 அளவு என்றும் 12 துண்டு 1112 அளவு என்றும் குறிப்பிடப் படும். 1/12 அளவில் 1000 படிகள் அச்சிட 1000|12=83.1/3 தாள் தேவைப்படும். 1/8 அளவில் 500 படிகள் அச்சிட 500/8=62த் தாள் தேவைப்படும். இதுபோலவே கிரவுன் அளவிலும் 118, 11:16, 1/4, 116, 1/12, 1/10 என்று துண்டு போட்டுக் கொள்ளலாம். ஒவ்வொரு வேலைக்கும் தேவையான அளவு கணக்குச் செய்து தாள்களை வாங்கிக் கொள்ள வேண்டும். துண்டுகள் அனைத்தும் ஒரே அளவான துண்டுகள். தாள் வாங்கும்போது, அச்சுப் பொறியில் ஏற்படும் வீண் கழிவுக்காக இரண்டு அல்லது மூன்று விழுக்காடு