பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


சேர்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படி வாங்கினால் தான் வீணானது போக சரியாக ஆயிரம் அல்லது 500 என்று அச்சிட்டுக் கொடுக்க முடியும்.

சரியாகக் கணக்குப்படி தாள் வாங்கி அச்சிட்டால், வீணான தாள்கள் போக அச்சிட்ட தாள்களின் எண்ணிக்கை குறைந்து போய்விடும். ஆயிரம் தேவைப்படுபவருக்கு 10 தாள் குறைவாகக் கொடுத்தால், தேவை நிறைவின்றிப் போய்விடும். ஆகவே, சிறிதளவு தாள் கூடப் போட்டு வேலை செய்து சரியான எண்ணிக்கையுள்ள படிகளை வழங்க வேண்டும்.

ஒவ்வொரு வேலைக்கும் ஆகும் வீண் கழிவைக் கணக்குச் செய்து தாள் வாங்க வேண்டும்.