பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கட்டுதல் BINDING எழுத்தைக் கோத்தல் என்று சொல்லுவது போல் நூலைக் கட்டுதல் என்று சொல்லுகிறோம். அச்சிட்டு முடிந்த பின் ஒரு புத்தகத்தை, மடித்துத் தைத்து அட்டை ஒட்டி வெட்டி உருவாக்கித் தரும் தொழில் கட்டு வேலை’ அல்லது கட்டுதல் எனப்படுகிறது. முதலில் அச்சிட்ட படிவங்களை மடித்தல் வேண்டும். பதினாறு பக்கம் கொண்ட படிவம் மூன்று முறை மடித்த பின் புத்தக வடிவு பெறுகிறது. படிவத்தாளை மடிக்க ஒரு சிறு மரத்துண்டு பயன்படுகிறது. இதனைத் தந்தம் என்று அழைப்பார்கள். தந்தத்தின் வடிவில் இருப்பதால் இது தந்தம் எனப்படுகிறது. மடிக்க வேண்டிய படிவத் தாள்களை மேசையின் மீது அடுக்காக விரித்து வைத்துக் கொள்ள வேண்டும். படிவ எண் உள்ள முதல் பக்கம் இடது கைப்பக்கம் அடியில் இருக்குமாறு படிவத்தாள்களை வைத்துக் கொள்ள வேண்டும். படிவத்தாளை வலது கைப்பக்கம் தூக்கி மடித்த வண்ணம் இடது கைப்பக்கத்தோடு ஒட்டும்படி செய்ய வேண்டும். அப்போது படிவத்தாளைச் சற்றுத் தூக்கி இடது கையில் நான்கு விரல்கள் அடிப்புறத்திலும் பெருவிரல்