பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


மேற்புறத்திலும் இருக்கும்படி தாளின் இரண்டு புறங்களும் ஒன்றின்மேல் ஒன்று படிய, பக்கங்கள் ஒன்றின் மேல் ஒன்று படிந்து இருக்குமாறு ஒட்டிப் பிடித்துக் கொண்டு, படிவத்தின் நடுப்புறத்தைத் தந்தத்தால் தேய்க்க வேண்டும்.

இது முதல் மடிப்பு.

முதல் மடிப்பு மடித்தவுடன், மடிப்பின் நடுப்பகுதியை வலது கை ஆள்காட்டி விரல் உள்புறம் இருக்க மற்ற விரல் களால் மடக்கி வரும்போதே இடது கை ஆள்காட்டி விரல் மடிப்பின் ஓரப்பகுதிகளை இணைத்துப் பிடித்துக் கொள்ள, மற்ற விரல்கள் எதிர்ப்புறத்தை அணைத்துக்கொள்ள, ஏற்படும் நடுப்பகுதியில் தந்தத்தால் அழுத்தித் தேய்க்க வேண்டும். இது இரண்டாவது மடிப்பு.

இரண்டாவது மடிப்பு மடித்தவுடன், மடிப்பின் நடுப்பகுதியை வலது கை ஆள் காட்டி விரல் உட்புறம் இருக்க, மற்ற விரல்களால் மடக்கி விடும் போதே இடதுகை ஆள்காட்டிவிரல் மடிப்பின் ஓரப்பகுதிகளை இணைத்துப் பிடித்துக் கொள்ள, மற்ற விரல்கள் எதிர்ப் புறத்தை அனைத்துக் கொள்ள ஏற்படும் நடுப் பகுதியில் தந்தத்தால் அழுத்தித் தேய்க்க வேண்டும்.

இது மூன்றாவது மடிப்பு.

மூன்று மடிப்புகளும் மடித்தவுடன் புத்தக அளவுக்கு பதினாறு பக்கங்களும் அமைந்து ஒரு படிவம் மடித்து முடிந்து விடுகிறது.

அதை இடதுகைப்புறத்தில் வைத்துக் கொண்டு, மீண்டும் முன்போலவே அடுத்த படிவத்தாளை மடிக்க வேண்டும். இவ்வாறு முறைப்படி மடிப்பதால், ஒவ்வொருவரின் திறமைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் ஆயிரம் படிவங்கள் மடித்துவிட முடியும்.