பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


எட்டுப் பக்கப் படிவமாக இருந்தால், இடது கையின் எதிர்ப்பக்கத்தில் அடிப்புறம் படிவ எண்ணுள்ள பக்கம் இருக்குமாறு படிவத்தாள்களை அடுக்கி வைத்துக்கொண்டு, முன்சொன்ன முறைப்படியே, இரண்டாவது மூன்றாவது மடிப்புகளை மடித்திடும் முறைப்படியே மடித்து முடிக்சு வேண்டும்.

ஒரு புத்தகத்துக்குரிய படிவங்கள் அனைத்தையும் படிவ எண் வாரியாக மடித்துக் கட்டுப் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். கட்டுக்கு 500 படிகள் ஆக ஒவ்வொரு படிவமும் இரண்டு கட்டாக வரும்.

தொகுத்தல் (Compose)

கட்டுகளை அவிழ்த்து ஒரிடத்தில் தரையில் கீழ்க்கண்ட முறைப்படி அரை வட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். புத்தகத்தின் படிவங்கள் பத்து என்று வைத்துக் கொள்வோம். பத்துப் படிவங்களுக்கும் உரிய கட்டு ஒவ்வொன்றை எடுத்து இடதுபுறம் முதல் படிவம், அதையடுத்து இரண்டாவது படிவம், அடுத்து மூன்றாவது படிவம் இப்படியே அரை வட்டமாகப் பத்துப்படிவங்களையும் அடுத்தடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் எதிரில் உட்கார்ந்து கொண்டு வலது புறத்திலிருந்து ஒவ்வொரு கட்டிலிருந்தும் ஒவ்வொரு படிவமாக எடுத்து இடது கையில் அடுக்கிக் கொண்டே வரவேண்டும். அடியில் 10வது படிவமும் அதன் மேல் 9வது படிவமும் அதன் மேல் 8வது படிவமும் இப்படியே மேலாக முதல் படிவமும் வரும். அதை அப்படியே எதிரில் வைத்துவிட்டு அடுத்து எடுக்கத் தொடங்கவேண்டும். இப்படி ஒவ்வொரு புத்தகத்திலுக்கும் உரிய படிவங்கள் வரிசையாக ஒன்றின் மேல் ஒன்றாக அமைய அடுக்கிக் கொண்டே வரவேண்டும். சிறிது உயரம் வந்ததும் அதைக் கட்டி வைத்துவிட்டு, மீண்டும் தொகுத்துக் கொண்டே வர வேண்டும். ஒவ்வொரு கட்டுதீர்ந்ததும் மீந்துள்ள கட்டுகளை