பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


முன்சொன்னபடி வரிசைப்படி வைத்து மீண்டும் தொகுத்து ஆயிரம் புத்தகங்களும் எடுத்து முடிக்க வேண்டும். எல்லா வற்றையும் கட்டுக் கட்டாகக் கட்டி வைக்கவேண்டும். புத்தகம் பத்துப் படிவத்துக்கு மேல் இருக்குமாயின் இரண்டு பகுதிகளாகப் பிரித்துத் தொகுத்துக் கொண்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம். படிவங்கள் மிகுதியாக இருந்தால் மூன்று நான்கு பங்காகத் தொகுத்துக் கொண்டு பின் அவற்றை இணைத்துக் கொள்ளலாம். குத்துத் தையல் (Side Stitching) புத்தகத்தின் படிவங்கள் மிகுதியாக இல்லையென்றால். பத்து அல்லது அதற்குக் குறைந்த படிவங்களே இருந்தால், அந்தப் புத்தகத்தைக் குத்தித் தைத்து விடலாம். புத்தகத் தின் பக்கங்களை முழுவதுமாக விரித்து வைக்க முடியாது என்பது ஒன்று தான் இந்தத் தையலில் உள்ள குறையாகும். மற்றபடி இது சிக்கனமானதும் வேலை எளிதானதும் ஆகும். விரைவாகவும் தைத்து முடிக்கலாம். யாரும் எளிதாகப் பழகிக் கொள்ளலாம். கோத்து அடுக்கி வைத்த கட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கட்டவிழ்த்து வைத்துக் கொள்ள வேண்டும். ஓரிடத்தில் உட்கார்ந்து எதிரில் ஒரு சதுரப் பலகையை வைத்துக் கொள்ள வேண்டும். அப்பலகையின் ஒரு மூலையில் தேன் மெழுகை ஒட்டிக் கொள்ள வேண்டும். ஊசி, நூல், குத் துளசி, சுத்தியல் ஆகியவற்றையும் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுக்கிலிருந்து இரண்டு அல்லது மூன்று புத்தகங்களைச் சேர்த்து எடுத்து சதுரப்பலகையின் மீது முதுகு தன்பக்கமாக இருக்கும்படி தட்டி அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் புத்தகத்தின் முதுகுப் பக்கத்தின் ஒரமாக, சுமார்