பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


இரண்டு அங்குல இடைவெளி விட்டு குத்தூசியை வைத்து மூன்று இடங்களில் சுத்தியலால் தட்டிக் குத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மும்மூன்று புத்தகங்களாக எடுத்து முதுகுப்புறத்தின் ஓரத்தில் குத்தி வைத்துவிட்டு, ஒவ்வொரு புத்தகமாக எடுத்துத் தைக்க வேண்டும். அடுக்கிலிருந்து ஒரு புத்தகத்துக்குரிய படிவங்களை மொத்தமாக அப்படியே சற்று முன்பக்கம் விலக்கி இழுத்துக் கொள்ள வேண்டும். நூல் கோத்த ஊசியை எடுத்து, நடுக்குத்தில் கீழிருந்து மேலாக நுழைத்து, அடுத்து வலதுபுறக் குத்தில் கீழாக நுழைத்துப் பிறகு இடது புறக் குத்தில் மேலாக நுழைத்து மீண்டும் நடுக்குத்தில் மேலிருந்து கீழாக நுழைத்து, விரைப்பாக நூலை இழுத்து முடிபோட்டு, மீதியுள்ள நூலை முடிவழித் தகட்டினால் (Blade) வெட்டி விடவேண்டும்.

இவ்வாறு புத்தகங்கள் முழுவதும் தைத்து முடித்தபின் புத்தகத்தின் இருபுறமும் பக்கத்தாள் (Side Paper) ஒட்ட வேண்டும். இருபது முப்பது பக்கத்தாள்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி தந்தத்தினால் சிறிது சரித்துவிட ஒரே சீராக விலகி வரும். விலகியுள்ள முதுகுப் பகுதியில் பசையைத் தடவிக் கொண்டு ஒவ்வொன்றாக எடுத்துப் புத்தகத்தின் முன்புறம் ஒன்றும், பின்புறம் ஒன்றுமாக முதுகுடன் சேர்த்து ஒட்டிவிட வேண்டும். இப்படி ஆயிரம் புத்தகங்களும் ஒட்டி முடிந்தபின், புத்தகத்தின் மேல் அட்டைகளை எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துக் கொண்டு உட்கார வேண்டும். அட்டை போடுவதற்கு இரண்டு பேராவது வேண்டும். மூன்று பேர் இருந்தால் வேலை விரைவில் முடியும்.

ஒருவர் புத்தக அடுக்கின் முதுகுப்புறத்தில் கூழ் தடவிக் கொடுக்க, மற்றொருவர், நீராக உள்ள கூழை அட்டையின் மீது உள்ளங்கையினால் எங்கும் பரவும்படி தடவிக்