பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91


கொடுக்க, ஒவ்வொரு புத்தகமாக வாங்கி அந்த அட்டையின் மீது வைத்துச் சீராக மடித்து விட்டுத் தனியே எடுத்து வைத்து விட வேண்டும். அட்டை போடும்போது, அட்டை யின் முன் தலைப்பக்கமும், புத்தகத்தின் முன்பக்கமும் ஒரு புறமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அட்டை போட்ட புத்தகங்களை, ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துக் கொண்டு வந்தால், இருபுறமும் அட்டை படிந்து சீராக ஒட்டிக் கொள்ளும், சிறிது ஈரம் காய்ந்த பிறகு, அழுத்து பொறியில் (Hard Press) அழுத்தி எடுத்து வெட்டி விடலாம். வெட்டும் போது, வெட்டுப்பொறியின் பின் அணைப்பில் முதுகுப் புறத்தை அணைத்து, வயிற்றுப் புறத்தை வெட்ட வேண்டும். ஒரம் வெட்டிய பிறகு புத்தகத்தின் அகலம் 5 அங்குலம் இருக்குமாறு பார்த்து வெட்ட வேண்டும். வயிறு வெட்டியபின் தலைப்பக்கத்தை அனைத்து வால் பக்கத்தை வெட்ட வேண்டும். வால் பக்கம் வெட்டிய கையோடு அப்படியே புரட்டி, அணைப்பு ஓரத்தில் ஒர் அட்டைத்' துண்டை வைத்து, தலைப்பக்கம் வெளியில் நீண்டு வரும்படி செய்து, நீண்டு வரும் பகுதியை வெட்டித் தள்ள வேண்டும். மூன்று புறமும் வெட்டி முடித்து விட்டால், புத்தகம் முழு நிலையில் தயாராகி விட்டது. வெட்டிய பிறகு கையில் புத்தகத்தை எடுத்துப் பார்த்தால், முடிவெட்டிக் கொண்டு வந்து முன்னால் நிற்கும் குழந்தையைப்போல் அழகாக இருக்கும். எல்லாப் புத்தகங்களும் வெட்டி முடிந்தபின், கட்டுப் போட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்துக் கூலி பெறுதல் வேண்டும். uðūlā Gogudo (Section Stitching). எவ்வளவு பெரிய புத்தகமானாலும் அழகாக விரித்து வைத்துப் படிக்க வசதியானது இந்தத் தையல் முறை. நூல் மிகுதியாகச் செலவாகும். தைப்பதற்கு நன்கு பயிற்சி பெற்றவர்கள் தேவைப்படும். நீண்ட நேரம் பிடிக்கும் ,