பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97


அடுத்தபடியாக மேல் இரண்டு படிகளிலும், மூலப் படியி gyub QTairl-fraugo Liquoyib (Original & Duplicate) தலைப்பக்கத்தில் கிழிப்பதற்குத் துளையிட்டுக் (Perforation) கொள்ள வேண்டும். துளையிட்டு முடித்தபின் மூலப்படி மேலாகவும், இரண்டாவது படி கீழாகவும், மூன்றாவது படி அதற்குக் கீழாகவும் இருக்கும்படி கோத்துக் கொள்ள வேண்டும். இடதுபக்கம் மூலப்படியும் நடுவில் இரண்டாவது படியும் மூன்றாவது படி வலப்பக்கத்திலும் வைத்து வலது கையி னால் மூன்றாவதுபடி இரண்டாவதுபடி மூலப்படி என்ற வரி சையில் ஒவ்வொன்றாக எடுத்து எதிரில் அடுக்கிக் கொண்டே வர வேண்டும். முழுவதும் அடுக்கியபின் நூறு நூறு அடுக்கு களைத் தனித்தனியே பிரித்துத் தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பத்துப்புத்தகங்களுக்கு மேலும்கீழும் ஒவ்வொன்று வீதம் 20 பழுப்பு அட்டைகள் பட்டியல் அளவில் வெட்டிக் கொள்ளவேண்டும் புத்தகத்தின் அடியில் ஓர் அட்டையும் மேலே, மெல்லிய வெள்ளை அட்டைத்துண்டு ஒன்றைத் தலை யோடு ஒட்ட வைத்து அந்த அட்டையின் மீது கூழ் தடவி மூன்று எம் இடைவெளி விட்டு, மேல் பழுப்பு அட்டையை அந்தத் துண்டில் ஒட்டிக்கொள்ள வேண்டும். இப்போது கீழ் அட்டையையும், மேல் அட்டையின் பகுதியாக இருக்கும் மெல்லிய வெள்ளை அட்டையையும் சேர்த்துப் புத்தகத்தின் தலைப் பகுதியில் குத்துசியால் மூன்று துளை போட்டுக் கொள்ள வேண்டும். இத் துளைகளில் ஊசியை விட்டுக் கோத்துத் தைத்து விடவேண்டும். தைத்தபின், முதுகில் காலிகோ துணி ஒட்ட வேண்டும். இந்தத் துணி போக மீத முள்ள இடத்தில் மேலட்டையின் வெளிப் புறத்திலும் கீழட்டையின் வெளிப்புறத்திலும் பளிங்கு வண்ணத்தாள் (Marble Paper) ஒட்டிக் காயவைக்க வேண்டும். காய்ந்தபின் மூன்று புறங்களிலும் வெட்டிவிட்டால் புத்தகம் ஆகிவிடும். சில பட்டியல்களில் தலைப்பக்கத்தில் குத்தித் தைப்ப தலுைவற்றில் இடதுபுறம் குத்தித் தைப்பதுண்டு. re PH --r_aجميع چر