பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெ. பெ. பெ. ஆஸ்தானபுரம் ாேடக சபை (அங்கம் ! ஏதோ கேட்டால் குட்டிச்சுவர் என்கிருர்களே-அக் காரணம் பற்றிதான் காதலர்கள் இங்கு வரப் போகி ருர்கள் போலிருக்கிறது. பொறுங்கள்! பெருமீசன் சுவரருகில் வருகிருன். பெருமீசன் குட்டிச் சுவரிடம் வருகிருன். வெளிச்சமில்லா இருளே - கருப்பாயிருக்கும் பொருளே கருப்பாயிருக்கும் பொருட்டே - கவின் பெரும் இருட்டே! திரிசூலி சொன்னதை மறந்தனளே! என்னைக் கைவிட்டுத் துறந்தனளே! அழகிய செங்கல் சுவரே! அழகிய மண்சுவரே! எங்கள் இருவர் நிலங்களுக்கும் இடையில் இருக்கும் கற்சுவரே! உன் பிளவைக் கொஞ்சம் காட்டு-இதோ பாடுகிறேன் ஒரு பாட்டு. (சுவர் இரண்டு விரல்களைக் காட்டுறது.) (பாடுகிறன்.) ஹா! உனக்கு கோடி வந்தனம் என் இருகைய ல் தந்தனம் ஹா! என்காதலியைக் காணேனே மோசம் தான் போனேனே! மட்டி சாம்பிராணியாகிய குட்டிச்சுவரே! என்மதியை மயக்கிட உனக்கென்ன பவுரே! குட்டிச்சுவருக்கு புத்தி யிருப்பதானுல், திட்டவேண் டும் திருப்பி. அப்படி கூடாதுங்க மஹராஜா என்னபவுரே, என்று நான் சொன்னவுடன், திரிசூலி வரவேணுங்க -இப்போ வரப்போரா பாருங்க அவளை நான் இந்த சுவத்தின் பிளவு வழியாகப் பார்க்கப் போகிறேன்நான் சொன்னபடியே நடக்கப் போகிறது பாருங்க! அதோ அவள் வர்ராள்! (திரிசூலி வருகிருள்.) சுவரே! சுவரே குட்டிச்சுவரே! மண்ணுங்கட்டிச் சுவரே! என் காதலனிடமிருந்து விண்டு, உன்னை நான் கட்டிக் கொண்டு, எத்தனே முறை அழுவேனே,